விஜய்க்கு அடுத்து தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்…!

0 315

சிம்புவுடன் “போடா போடி” படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தற்போது பல முக்கிய தோற்றங்களில் நடித்து கலக்கி வருகின்றார். அவரின் நடிப்பு மற்றும் ஆடல் திறமையால் பல படங்கள் அவரை தேடி வருகின்றது.

இதன்போது தளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வரலட்சுமி தனது பகுதிக்கான டப்பிங் பணியை சமீபத்தில் முடித்துவிட்டு அந்த படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெற்றார்.

இந்த நிலையில் சர்கார்’ படத்தை அடுத்து தனுஷுடன் வரலட்சுமி நடித்து வந்த ‘மாரி 2’ படத்தின் டப்பிங் பணியையும் அவர் நேற்றுடன் முடித்துவிட்டார். எனவே ‘மாரி 2’ படத்திலும் அவருடைய பணி முற்றிலும் முடிந்துவிட்டது. இந்த இரண்டு படங்களும் வரலட்சுமிக்கு முக்கியமான படங்கள் என்பதும் இந்த இரண்டு பட வெளியீட்டுக்கு பின்னர் அவருடைய திரையுலக மார்க்கெட் கிடுகிடுவென உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘சர்கார்’, ‘மாரி 2’ தவிர ‘சண்டக்கோழி 2’, ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னி ராசி’ மற்றும் ‘அம்மாயி’ ஆகிய படங்களிலும் வரலட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!