ராகவா லோரன்சுக்கு சிறந்த சமூக சேவைக்கான அன்னைத் தெரேசா விருது…!

0 294

அன்னை தெரேசாவின் பிறந்தநாளை முன்னிட்டு  நடிகர் ராகவா லோரன்சுக்கு சிறந்த சமூக சேவைக்கான அன்னை தெரேசா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசாவின் 108ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

“மதர் தெரேசா சாரிட்டபிள் டிரஸ்ட்’ சார்பில் நடத்தப்பட்ட விழாவிற்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். குறித்த விருதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழங்கிவைத்தார்கள்.

விருது குறித்து ராகவா லோரன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன். நான் இந்த அளவு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கார்துடைக்கும் வேலை செய்த என்னைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார், எனக்கு கடிதம் கொடுத்து நான் டான்ஸ் மாஸ்டர் ஆக உதவி செய்தார். அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராகி இன்று இயக்குனர், தயாரிப்பாளர் என்று உருவாக எத்தனையோ பேர் உதவி இருக்கிறார்கள்.

குறிப்பாக சூப்பர் சுப்பராயன், ரஜினிசார், விஜய், அஜீத், சிரஞ்சீவி, இயக்குனர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜூனா சார் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!