நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடும் பன்னீர்…. உண்மையில் ஆரோக்கியமானதுதானா?…

0 967

இன்றைய இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பன்னீர்தான். சென்ற தலைமுறை வரை வெகுசிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த பன்னீர் நாகரீக வளர்ச்சியால் இன்று கிட்டத்தட்ட அனைவரின் இல்லத்தையும் சென்றடைந்து விட்டது என்றே சொல்லலாம்.

அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பன்னீர் மாறிவிட்டது. ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக்கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பன்னீர் கொண்டு நாம் சமைக்கலாம். அதுமட்டுமின்றி பன்னீரை அதிக குழந்தைகள் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த பன்னீர் பல ஆரோக்கிய கேடுகளையும் சேர்த்தே உருவாக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று. இதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை இங்கே பார்க்கலாம்.

100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க புரோட்டின் மிகவும் அவசியமான ஒன்று. எனவே கட்டுமஸ்தான உடலை விரும்புபவர்கள் பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மேலும் இது பசியை கட்டுப்படுத்துவதால் அதிக உணவு உட்கொள்வதை தடுக்கிறது.

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கல்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கல்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது.

இளைஞர்கள் பலரும் சருமம் ஆரோக்கியமாக இருக்க அதிக செலவு செய்கிறார்கள். ஆனால் பன்னீர் இந்த வேலையே மிகசுலபமாக செய்யக்கூடியது. இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் செலேனியம் சரும பொலிவை அதிகரிக்கும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது பன்னீரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கிறது. இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் பன்னீர் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது குறைகிறது. இது ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இறைச்சியும், மீனும் இப்படியான விளைவுகளைக் கொண்டிருக்க, பெரும்பாலானோரின் கவனம் பன்னீர் பக்கம் திரும்பியது. ஆனால் அதிலும் இப்படியொரு கலப்படத்தைக் கண்டு, அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்த இந்த பன்னீர் வயிறு, குடல் சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்கும். அதோடு கேன்சரையும் போனஸாகக் கொடுத்திடும். 
அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறு நீங்கள் சாப்பிட்ட பன்னீரில் கலப்படம் இருப்பதை உணர்த்தும். 

நவீனம் என்ற பெயரில் நல்ல உணவுகளை புறம் தள்ளினோம், இப்போது நாமே தேடிச் சென்றாலும் கிடைக்காத நிலைமையில் தான் இவ்வுலகம் இருக்கிறது. இதன் அடுத்தக் கட்டமாக, விட்டமின், புரோட்டின் என அனைத்து நியூட்ரியன்ட்களுக்கும் மாத்திரைகளை மட்டுமே சாப்பிடும் நாளும் வெகு தொலைவில் இல்லை. 

இப்படி உணவுக் கலப்படம் செய்பவர்கள் கையும் களவுமாகப் பிடிப்பட்டால், அவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை போன்றவைகள் வழங்கப்பட்டால் ஒழிய, மற்றவர்கள் இந்த மாதிரியான செயலில் ஈடுபடாமல் இருப்பார்கள். 

உயிருடன் விளையாடும் இவர்களுக்கு தன் குடும்பத்தினரும் மற்ற நிறுவன தயாரிப்பு உணவுகளைத் தான் சாப்பிடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!