இல்வாழ்வை இனிக்க செய்ய புதிய வகை ஆணுறையை உருவாக்கிய விஞ்ஞானிகள்

0 1,379

லண்டனைச்சேர்ந்த விஞ்ஞானிகளால் தாமாகவே மசகிடக்கூடிய ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை பயன்படுத்தும்போது வழுக்கிச்செல்லக்கூடிய உணர்வைத் தரவல்லன.

இதனால் உராய்வால் உண்டாகும் வேதனை குறைக்கப்படுவதுடன், உடலுறவின்போது பூரண திருப்பியும் கிடைக்கிறது.

தற்போது பெரும்பாலும் பாவனையிலுள்ள “மரப்பால் ஆணுறைகள்” சிறந்த தடைப் பண்புகளைக் கொண்டிருப்பதுடன் அவை விலை குறைந்தவையாகவும், பயன்படுத்த எளிதானவையாகவும் இருப்பினும் அவற்றின் மேற்பரப்பு உராய்வு மிக அதிகம்.

இது உடலுறவின்போது பெரும்பாலான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.

உதாரணத்திற்கு, ஆணுறைகள் உடைதல் மற்றும் அசௌகரியம் ஏற்படுதலுக்கு காரணமாகிறது.

2008 இல் லண்டனில் மேற்கொள்ளப்பட்டிருந்த பகுப்பாய்வில், 70 வீதமான ஆண்களும், 40 வீதமான பெண்களும் தாம் ஆணுறைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக குறைந்களவிலான இன்பமும், அதிக அசௌகரியத்தையும் அனுபவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இவ்வகை ஆணுறைகளுடன் மசகிடும் திரவங்களை இணைத்துப் பயன்படுத்தியபோதும் கிடைத்த சந்தோசம் அதிக நேரம் நீடித்திருக்கவில்லை.

இதனால் உடலுறவின்போது அதிக சந்தோசத்தை அழிக்கும் வகையில் மேற்படி ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் , இவ் ஆணுறையானது,  ஆணுறை பாவளையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!