ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரைலர் வெளியானது

0 401

‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி அடங்கமறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார். இந்தப் படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் 24 ஆவது படம்.

இதில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த அடங்கமறு படத்தில் பொலிஸ் கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரை இன்று (31-10-2018) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து படம் நவம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!