ஐ போன் வாங்க குளியல் தொட்டியில் காசு சேர்த்த இளைஞன்

0 400

குளியல் தொட்டி முழுவதும் பல வருடங்களாக நாணயங்களை மட்டும் சேர்த்து வைத்து வந்த ரஷ்ய இளைஞர் ஒருவர், ஆப்பிள் ஐபோன் வாங்கி அசத்தி உள்ளார்.

மாஸ்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆப்பிள் ஐ.போன் வாங்குவதற்காக நாணயங்களை சேகரிக்கும் முடிவை எடுத்திருந்தார். இதற்காக அவருடைய நண்பர்கள் உதவியுடன் குளியல் தொட்டியில் நாணயங்களை சேகரித்து வந்துள்ளார்.அவ்வாறு நாணயங்கள் சேகரிக்கப்பட்ட குளியல் தொட்டியானது 350 கிலோ கிராம் எடையை  கொண்டிருந்தது.

பின்னர்,  ஆப்பிள் ஐ.போன் ஒன்று வாங்குவதற்கு தேவையான நாணயங்களை சேகரித்த பிறகு அந்த குளியல் தொட்டியை அப்படியே வாகனம் மூலம் ஐ.போன் ரஷ்யாவிலுள்ள மொஸ்கோ விற்பனையகத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அவரை பார்த்த உடன் யார் இது..? இப்படி செய்கிறாரே என முதலில் அவரை விற்பனையகத்திற்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தியவர்கள், பின்னர் அவர் ஐ போன் வாங்க வந்திருப்பதாக கூறிய பின் அவரை உள்ளே அனுமதித்து உள்ளனர்.

அவர் சேகரித்த நாணயங்களை எண்ணுவதற்கு சுமார் 2 மணித்தியாலங்கள்  செலவிடப்பட்டது. நாணயங்களை  எண்ணியபோது போன்  வாங்குவதற்கு போதிய  பணம்  அதில் இருந்தது.அவர் மகிழ்ச்சியுடன்  பணத்தை கொடுத்து நவீன ஐ போன்  எக்ஸ் எஸ் வாங்கி சென்ற இந்த ருசிகர சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!