‘96’ படத்தை பார்த்து வியந்த கிரிகெட் வீரர் தினேஷ் கார்த்திக்

0 455

‘96’ திரைப்படத்தைப் பார்த்த இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், படத்தை வியந்து பாராட்டியதோடு மற்ற வீரர்களுக்கும் இந்தப் படம் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில், கடந்த மாதம் வெளியான திரைப்படம் ’96. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார் இயக்கியிருந்தார். கோவிந்த் மேனன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், கடந்த தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. இருப்பினும், படம் கடந்த சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், “என்ன ஒரு அழகான படம் – 96. படம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்குப் பிடித்த பாடல் காதலே காதலே. படத்தின் ஒவ்வொரு பிரேமும் பிடித்திருந்தது, இசையும் கூட,” என தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், மற்றொரு பதிவில், “சில காலமாக விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகராக இருந்து வருகிறேன். 96 படத்தைப் பார்த்து வியந்து விட்டேன். அற்புதமாக இருக்கிறது. கோவிந்த் வசந்தா, சிறப்பாக பணியாற்றியுள்ளார். காதலே பாடலை லூப்பில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். வாஷிங்டன் சுந்தர், அபிநவ் முகுந்த் ஆகியோரும் இந்தப் படத்தின் மிகப்பெரிய ரசிகர்கள். அஷ்வின் உனக்குப் பிடித்துள்ளதா?,” என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!