பும்ராவால் 151 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆஸி…!

0 238

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

 

இப் போட்டியானது கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 08 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந் நிலையில் மூன்றாம் நாளான 08 ஓட்டத்துடன் முதல் இன்னிங்ஸை தொடர ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 66.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் மார்கஸ் ஹாரிஸ் மற்றும்  டீம் பெய்ன் ஆகியோர் தலா  22 ஓட்டங்களையும், உஷ்மன் கவாஜா 21 ஓட்டத்தையும், டிரவிஸ் ஹெட் 20 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 292 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo