குறைந்து வரும் புரோட்பாண்ட் பாவனையாளர்கள்…!

0 444

இந்தியாவில் உள்ள புரோட்பேண்ட் பாவனையாளர்கள் தொடர்பாக டெக் ஆர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.

இந்த அறிக்கையின்படி 2014-ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு கால கட்டத்தில் புரோட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் வெகுவாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனமானது, வயர்லெஸ் புரோட்பேண்ட் மற்றும் நிலையான புரோட்பேண்ட் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மேற்படி ஆய்வின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.

இந்தியாவில் மொத்தம் 525 மில்லியன் புரோட்பேண்ட் பயனாளர்கள் உள்ளன எனவும், இவர்களில் 500 மில்லியனிற்கு மேற்பட்டவர்கள் வயர்லெஸ் புரோட்பேண்டினையும், 17.6 மில்லியன் வரையிலானவர்கள் நிலையான புரோட்பேண்டினையும் பயன்படுத்துகின்றார்கள்.

2016ஆம் ஆண்டு ஜியோ வலை யமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் அதிகளவு இணைப்பு பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 73 சதவிகிதம் அதிக ரிப்பாக இருந்தாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அதன் பின்னர் 2017-ஆம் ஆண்டின் 54 சதவிகிதமாகவும், 2018-ம் ஆண்டில் 44.7 சதவி கிதமாகவும் குறைந்து காணப்படுகின்றது என்பது அறியப்பட் டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo