புத்தாண்டு வாழ்த்தை ஐபோனில் தெரிவித்த ஹுவெய் நிறுவன ஊழியருக்கு சம்பளம் குறைப்பு

0 835

ஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இரண்டு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்புடன் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக அளவில் பெரும் தொழில் போட்டிகள் கொண்ட நிறுவனங்கள் சீனாவின் ஹுவெயும், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும். உலக அளவில் ஸ்மார்ட்போன்‌ விற்பனையில் 2வது பெரிய நிறுவனமாக இருந்த ஆப்பிள் நிறுவனத்தை, பின்னுக்கு தள்ளி ஹுவெய் நிறுவனம் அந்த இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த புத்தாண்டு அன்று ஹுவெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாழ்த்து ஐ போனில் இருந்து அனுப்பப்பட்ட அடையாளத்துடன் ட்விட்டரில் பகிரப்பட்டது.

இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக அந்த ட்விட்டை அழித்துவிட்ட நிலையில், அந்த ட்விட் ஸ்கிரீன்ஷாட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. மேலும் ஒரு செல்போன் நிறுவனமே தனது போட்டி நிறுவனத்தின் செல்போனைத்தான் பயன்படுத்துகிறது என்ற கிண்டலுக்கும் ஆளானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹுவெய் நிறுவனம், சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டு இருப்பதால், விபிஎன் முறையில் வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்தே சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துகின்றனர். அதில் ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் என்று கூறியுள்ளது.

ஆனாலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஊழியர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு 5 ஆயிரம் யுவான் சம்பளக்‌குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதுடன், அடு‌த்த ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!