ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமெரிக்கா தீர்மானம்…?

0 747

தனி மனித உரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்றுகூடி ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பூதாகாரமாய் வெடித்த கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
 
இம்முறை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட இருக்கும் அபராத தொகை 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டதை விட அதிகளவு நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த முறை கூகுள் நிறுவனத்திற்கு இலங்கை மதிப்பில் 5 கோடி டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
 
கடந்த சில நாட்களாக அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் ஐந்து பேர் அடங்கிய விசாரணை குழு ஃபேஸ்புக் நிறுவனம் மீது மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த விவரங்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், அபராத தொகை பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.
 
விசாரனை குழுவினர் சமர்பித்து இருக்கும் விவரங்களை கொண்டு அபராத தொகையை விரைவில் பரிந்துரைக்கலாம் என கூறப்படுகிறது. இதுதவிர அமெரிக்க வர்த்தக ஆணையத்திடம் விசாரணை பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டதாக தெரிகிறது. 
 
எனினும், அபாரதம் விதிக்கப்படும் பட்சத்தில் வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையை ஃபேஸ்புக் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!