கழிவறைத் தொட்டிக்குள்ளிருந்த பாம்பு பெண்ணை தீண்டியதால் பரபரப்பு…!

0 467

கழி­வறைத் தொட்­டியில் அமர்ந்­தி­ருந்த பெண்­ணொ­ரு­வரை, கழி­வறைத் தொட்­டியின் அடிப்­பு­றத்­துக்கு ஊடாக வந்த மலை­பாம்­பொன்று கடித்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

குயின்ஸ்­லாந்து மாநி­லத்தின் பிரிஸ்பேன் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்பெற்றதாக பாம்பு பிடிப்­பா­ள­ரான ஜெஸ்மின் ஸெலேனி எனும் பெண் தெரி­வித்­துள்ளார்.

59 வய­தான ஹெலன் ரிச்சர்ட்ஸ் எனும் பெண்­ணையே இவ்­வாறு பாம்பு கடித்­துள்­ளது. அப்பெண் கழிவறைக்குச் சென்­ற­போது, தான் அங்கு அதிக நேரம் இருக்கப் போவ­தில்லை என்­பதால் மின்­வி­ளக்கை ஒளிரச் செய்­ய­வில்லை.

இவர் கழி­வ­றைத்­தொட்­டியில் அமர்ந்­தி­ருந்­த­போது, அவரின் உடலின் பின்­பு­றத்தில் பாம்பு கடித்­தது என ஜெஸ்மின் ஸெலேனி தெரி­வித்­துள்ளார்.

கழி­வறைத் தொட்­டி­யி­லி­ருந்து  பாம்பு தன்னை கடித்­ததும் ஹெலன் ரிச்சர்ட்ஸ், பெரும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்­பாக, உள்ளூர் பாம்பு பிடிப்­பா­ளர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து. பாம்­புப்­பி­டிப்­பா­ள­ரான ஜெஸ்மின் ஸெலேனி மேற்­படி வீட்­டுக்குச் சென்று பாம்பை அப்புறப்­படுத்தினார். 1.6 மீற்றர் நீள­மா­ன­தாக அப்­பாம்பு இருந்­தது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தக­வல்­களை வெளி­யிட்ட ஜெஸ்மின் ஸெலேனி மேற்படி பாம்­பொன்று கழி­வறைத் தொட்டிக் குள்ளிருந்து மனிதர்களின் உடலை இவ்வாறு கடிக்கும் சம்பவங்கள் அரிதானவை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!