சென்னை உணவகமொன்றில் முதல் முறையாக உணவு பரிமாறும் ரொபோக்கள்…!

0 193

இந்தியாவில் சென்னை போரூருக்கு அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் ரொபோக்களை கொண்டு உணவு பரிமாறியுள்ளனர்.

சென்னையில் முதன்முறையாக உணவகத்தில் ரொபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகின்றது. இதனால் உணவு பரிமாறும் ரொபோக்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றமையால், பலரும் அந்த உணவகத்தில் ஒரு முறையாவது சென்று சாப்பிட வேண்டும் என நினைக்கத் தோன்றியுள்ளது.

வாடிக்கையாளர்களை வரவேற்கவும், அவர்கள் டேப்லட்கள் மூலம் உணவுகளை தெரிவு செய்யவும், உணவுகளை கொண்டு வந்து பரிமாறவும் என மொத்தம் 8 ரொபோக்களை அங்கு பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.