மேடையிலிருந்தவாறு ரசிகர்கள் மீது பாய்ந்த ரன்வீர் சிங்: காரணம் என்ன..?

0 296

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவுடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்து கொண்டமை அனைவரும் அறிந்ததே.

இவரது நடிப்பில் அடுத்ததாக குல்லி பாய் என்ற படம் வெளிவரவுள்ள நிலையில் இப்படத்தின் பாடலை மும்பையில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் அவரது ரசிகர்கள் பெரும் திரளானோர் முன்பு பாடியவாறு நடனமாடியுள்ளார். 

அந்நிலையில், அவர் திடீரென ரசிகர்கள் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் அவர்கள் மீது பாய்ந்து குதித்துள்ளார்.. இதில் பெண்கள் உள்பட சில ரசிகர்கள் காயம் அடைந்துள்தாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், காயமடைந்த  ரசிகர்கள் பலர், பல்வேறு விதமாக சமூக வலைதளங்களில் ட்விட் செய்து வருகின்றனர். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!