வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 06 நிகழ்வுகள்…!

0 213

1658: சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்­டாவின் படைகள் உறைந்த கடலைக் கடந்து டென்­மார்க்கை அடைந்­தன.

1819: ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்­ப­வரால் சிங்­கப்பூர் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1840: நியூ­ஸி­லாந்தில் வைதாங்கி ஒப்­பந்தம் பிரித்­தா­னிய அரச பிர­தி­நி­தி­யாலும், மவோரி தலை­வர்­க­ளாலும் எட்­டப்­பட்­டது.

1918: பிரிட்­டனில் 30 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

1938: அவுஸ்­தி­ரே­லியா, சிட்னி கடற்­க­ரையில் பாரிய அலை­களால் 300 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1951: அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்­ஸியில் பய­ணிகள் ரயில் ஒன்று தடம் புரண்­டதில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர்; 500 பேருக்கு மேல் காய­ம­டைந்­தனர்.

1952: 6 ஆம் ஜோர்ஜ் மன்­னரின் இறப்­பை­ய­டுத்து இரண்டாம் எலி­ஸபெத், ஐக்­கிய இராச்­சியம், கனடா, அவுஸ்­தி­ரே­லியா, நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆபி­ரிக்கா ஆகிய 7 நாடு­க­ளுக்கு அர­சி­யானார்.

1958: ஜேர்­ம­னியின் மியூனிச் நகரில் நடை­பெற்ற விமான விபத்தில் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் யுனைட்டட் கால்­பந்­தாட்ட அணியின் 8 பேரும் மேலும் 15 பய­ணி­களும் கொல்­லப்­பட்­டனர்.

1959: கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முத­லா­வது டைட்டான் ஏவு­கணை புளோ­ரி­டாவில் வெற்­றி­க­ர­மாகப் பரி­சோ­திக்­கப்­பட்­டது.

1975: காங்­கே­சன்­துறை தொகு­தியில் இடைத்­தேர்தல் நடை­பெற்­றது.

1981: உகண்டா இரா­ணுவ முகாம்கள் மீது கிளர்ச்­சிக்­கு­ழுக்­களின் தாக்­குதல் ஆரம்­ப­மா­னது.

1996: அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் டொமி­னிக்கன் குடி­ய­ரசு அருகில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000: டார்ஜா ஹலோனென் பின்­லாந்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யானார்.

2004: மொஸ்­கோவில் சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 40 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2013: சொலமன் தீவு­களில் 8.0 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது.

2016: தாய்­வானில் பூகம்­பத் தினால் 116 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2018: ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி எனும், அதிக நிறையுள்ள பொருட்களை சுமந்துசெல்லக்கூடிய ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!