வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 07 நிகழ்வுகள்…!

0 215

1238: மொங்­கோ­லி­யர்கள் ரஷ்­யாவின் விளா­டிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்­தினர்.

1807: நெப்­போ­லி­யனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யப் படை­களின் மீது போலந்தில் தாக்­கு­தலைத் தொடங்­கினர்.

1819: சிங்­கப்பூரை ஸ்தாபித்த ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ், சிங்­கப்­பூரை வில்­லியம் ஃபார்க்­கூஹார் என்­ப­வ­ரிடம் ஒப்­ப­டைத்து விட்டு சிங்­கப்­பூரில் இருந்து புறப்­பட்டார்.

1863: நியூ­ஸி­லாந்தின், ஆக்­லாந்து நகரக் கரையில் ஓர்ஃ­பியஸ் என்ற கப்பல் மூழ்­கி­யதால் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1904: அமெ­ரிக்­காவின் மேரிலாண்ட் மாநி­லத்தின் பால்ட்­டிமோர் நகரில் பர­விய தீயினால் 1,500 கட்­ட­டங்கள் 30 மணித்­தி­யா­லங்­களில் தீக்­கி­ரை­யா­கின.

1962: கியூபா மீது ஐக்­கிய அமெ­ரிக்கா ஏற்­று­மதி, மற்றும் இறக்­கு­மதி தடை­களை விதித்­தது.

1967: அமெ­ரிக்­காவின் அல­பா­மாவில் உண­வகம் ஒன்றில் பர­விய தீயினால் 25 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1967: அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னி­யாவில் ஏற்­பட்ட காட்­டுத்­தீ­யினால் 62 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1971: சுவிட்­ஸர்­லாந்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை கிடைத்­தது.

1974: ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து கிர­னடா சுதந்­திரம் பெற்­றது.

1977: சோவியத் ஒன்­றியம் சோயுஸ் 24 விண்­க­லத்தை இரண்டு விண்­வெளி வீரர்­க­ளுடன் விண்­ணுக்கு ஏவி­யது.

1979: புளூட்டோ கிரகம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டபின் அது முதல் தட­வை­யாக நெப்­டி­யூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்­தது.

1986: ஹெயிட்டி ஜனா­தி­பதி ஜீன்-­குளோட் டுவா­லியர் நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றினார். இதனால் 28 வருட கால ஒரே குடும்ப ஆட்சி முடி­வுக்கு வந்­தது.

1990: சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சியின் மத்­திய குழு தனி ஆதிக்­கத்தை கைவி­டு­வ­தற்கு இணங்­கி­யது.

1991: ஹெயிட்­டியின் முத­லா­வது ஜன­நா­யக ரீதி­யான ஜனா­தி­ப­தி­யான ஜீன்-­பேட்ரண்ட் ஆர்ட்­டிஸ்டே பத­வி­யேற்றார்.

1991: ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவம் லண்­டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்ற போது அங்கு குண்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யது.

1992: ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை ஸ்தாபிப்­ப­தற்­கான மாஸ்ட்ரிக்ட் ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

1999: உலக தமிழ் இணைய மாநாடு சென்­னையில் ஆரம்­ப­மா­னது.

1999: ஜோர்தான் மன்னர் ஹுஸைன் இறந்­த­தை­ய­டுத்து அவரின் மகன் அப்­துல்லா புதிய மன்­ன­ரானார்.

2009: அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரியா மாநி­லத்தில் ஏற்­பட்ட காட்டுத் தீயினால் 173 பேர் உயி­ரி­ழந்­தனர். அவுஸ்­தி­ரே­லிய வர­லாற்றில் மிக அதிக மனித உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­திய இயற்கை அனர்த்தம் இதுவாகும்.

2012: மாலைதீவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதி மொஹமட் நஷீட் ராஜினாமா செய்தார்.

2013: ஸாம்பியாவில் பஸ் ஒன்றுடன் ட்ரக் ஒன்று மோதியதால் 53 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!