தொகுப்பாளர் இன்றி நடைபெறப்போகும் ஒஸ்கார் விருது விழா….!

0 217

30 ஆண்டுகளுக்கு பிறகு 91 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா இம்முறை தொகுப்பாளர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொலிவுட் சினிமா உலகில் கௌரமிக்க விருதாக கருதப்படுவது ஒஸ்கார் விருது. சிறந்த கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறும். இம்முறைக்கான ஒஸ்கார் விருது வழங்கும் விழா வருகின்ற 24 ஆம் திகதி லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருகின்றது.

யாரெல்லாம் விருது பெறபோகின்றார்கள் என்ற எதிர்பார்ப்புக்கள் எல்லோரிடமும் இருந்து வரும் நிலையில் இவ்விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் செலுத்தி வருகின்றது.

அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஒஸ்கார் விருது வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பொலிவுட் நடிகை மற்றும் தற்சமயம் ஹொலிவுட்டில் பிரபலமாகி வரும் பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி இருந்தார்.

Image result for priyanka chopra anchor in oskar

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட சர்ச்சை கருத்தால் இம்முறைக்கான விருது விழாவை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

இதனடிப்படையில், 91ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!