வட்ஸ்அப் செயலியில் இருந்த அந்த அம்சம் தற்போது ஃபேஸ்புக்கிலும்…!

0 622

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.
வட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் செயலியிலும் குறுந்தகவல்களை தனிநபர் மற்றும் குழுவாக செயற்படுத்தப்படும் குறுந்தகவல்களை அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய குறுந்தகவலை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட குறுந்தகவல் இருந்த இடத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது. மெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மெசஞ்சரில் குறுந்தகவல்களை அழித்தபின், இந்த அம்சம் உருவாக்கப்படுவதை ஃபேஸ்புக் உறுதி செய்திருந்தது. குறுந்தகவல்களை பயனர் தங்களுக்கு மட்டும் அழித்துக் கொள்ள குறுந்தகவல்களை தேர்வு செய்து “Remove for You” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் குறுந்தகவல் பயனருக்கு மட்டும் அழிக்கப்பட்டு விடும். ஃபேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!