வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 08 நிகழ்வுகள்…!

0 206

1238: ரஷ்­யாவின் விளா­டிமிர் நகரை மொங்­கோ­லியப் படைகள் எரித்­தன.

1587 : இங்­கி­லாந்து அரசி முதலாம் எலி­ஸ­பெத்தை கொலை செய்ய முயற்­சித்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு ஸ்கொட்­லாந்து அரசி முதலாம் மேரி தூக்­கி­லி­டப்­பட்டார்.

1622 : இங்­கி­லாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்­கி­லாந்தின் நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்தார்.

1761 : லண்­டனில் நில­ந­டுக்கம் பதி­யப்­பட்­டது.

1849 : புதிய ரோமன் குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

1900 : போவர் போர்: தென் ஆபி­ரிக்­காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்­தா­னியப் படைகள் போவர்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.

1904 : சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்­கி­யது.

1924 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் மரண தண்­ட­னை­க­ளுக்கு முதற் தட­வை­யாக நச்சு வாயுவை பயன்­ப­டுத்தும் முறை நெவாடா மாநி­லத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1942 : ஜேர்மன் நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ், ஜேர்­ம­னி­யி­லி­ருந்து தெற்­கா­சி­யா­வுக்குப் புறப்­பட்டார்.

1942: சிங்­கப்­பூரை ஜப்பான் ஆக்­கி­ர­மித்­தது.

1952: பிரித்­தா­னிய ஐக்­கிய இராச்­சி­யத்தின் அர­சி­யாக இள­வ­ரசி 2 ஆம் எலி­ஸபெத் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டார்.

1963 : கியு­பா­வு­ட­னான போக்­கு­வ­ரத்து, பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் ஐக்­கிய அமெ­ரிக்க மக்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்­ட­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எஃப். கென்­னடி அறி­வித்தார்.

1974 : 84 நாட்கள் விண்ணில் சஞ்­ச­ரித்த பின்னர் முத­லா­வது அமெ­ரிக்க விண்வெளி ஆய்­வு­கூட (ஸ்கைலாப்) 4 வீரர்கள் பூமி திரும்­பினர்.

1989 : போர்த்­துக்­கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதி­யதால் 144 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2005 : இஸ்­ரேலும், பலஸ்­தீ­னமும் போர் நிறுத்­தத்­திற்கு உடன்­பட்­டன.

2010: ஆப்­கா­னிஸ்­தானின் இந்­துகுஷ் மலையில் ஏற்­பட்ட பனிச்­ச­ரி­வினால் 172 பேர் உயி­ர­ழந்­தனர்.

2010: ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டுத் தோல்­வி­யுற்ற, முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் சரத் பொன்­சேகா (தற்­போது பீல்ட் மார்ஷல்), இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

2014: சவூதி அரேபியாவின் மதீனா நகரில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீயினால் 15 யாத்திரிகர்கள் உயிரிழந்ததுடன் 130 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!