நீங்கள் விரும்பாத வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீங்குவதற்கு புதிய வசதி

0 647

வாட்ஸ்ஆப் குழுக்களில் புதிய நபர்களை இணைக்கும் முறையில் புதிய விதிகள் வகுக்கப்படவுள்ளதாகவும், விரைவில் அது வரக்கூடிய அப்டேட்டில் இடம்பெறும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

தகவல் பரிமாற்ற செயலியில், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் சாட்டிங் அப்ளிகேஷன்களில் முதல் இடத்தில் உள்ளது. ஹைக், டெலிகிராம் போன்ற பிற அப்ளிகேஷன்கள் இருக்கும் நிலையிலும் வாட்ஸ்ஆப் உலக அளவில் அதிக பயனர்களை பெற்றுள்ளது.

உலகம் முழுவதிலும் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த செயலியில், பயனாளர்களின் தேவைக்கும் ஏற்பவும், அவர்களது பயன்பாட்டை கருத்தில் கொண்டும், புதிய அப்டேட்டுகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.

அண்மையில், வாட்ஸ்ஆப்பில் புதிதாக ஸ்வைப் செய்தால், உடனடியாக பதில் அனுப்பும் தேர்வு வழங்கப்பட்டது. தகவல் பரிமாற்றத்தை இன்னும் எளிமைப்படுத்தி வழங்கிய இந்த வசதி பலரிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியின், குழு நிர்வாகி (Group Admin) யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளால்லாம். இந்த முறையில் மாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டு வருகிறது.

அதன்படி, தேவையற்ற வாட்ஸ்ஆப் குழுக்களில் பயனர்கள் இணைக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாட்ஸ்ஆப் செட்டிங்கில் உள்ள பிரைவசி தேர்வில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

அதை க்ளிக் செய்தால் மூன்று விதமாக உட் தேர்வுகள் வரும். அதில் Everyone, My Contacts, No body என்று இருக்கும். அதில் No body என்ற தேர்வை தேர்வுசெய்தால் போதும், தேவையற்ற குழுக்களில் நாம் சேர்க்கப்படுவதை தவிர்க்கலாம்.

ஒருவேளை குழுக்களில் சேர்க்கப்படுவதற்காக அட்மினி அனுமதி உங்களுக்கு கிடைக்கப்பெற்றால், அதற்கான பதிலை நீங்கள் வழங்கவில்லை என்றாலும் அந்த அனுமதி கோரிக்கை 72 நாட்கள் வரை மட்டுமே காத்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!