தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல நடிகை: அதிர்ச்சிக்குள்ளாக்கிய நோயால் கதறியழும் சகோதரி..!

0 337

விஜய், சூர்யா நடித்த ’ஃப்ரண்ட்ஸ்’, சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ பட நாயகி விஜயலட்சுமி உடல்நலம் சரியில்லாமல், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்தது. அவர் தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி கூறிய விஜயலட்சுமி சகோதரி உஷா தேவி ‘விஜயலட்சுமிக்கு நேற்று இரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். ஆபத்தான நிலையில் இருக்கும் விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘அவர் கூறினார்.

2006-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஒரு உதவி இயக்குனர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியது தான் அவர் தற்கொலைக்கு முயல காரணமாக பேசப்பட்டது. அதே ஆண்டு விஜயலட்சுமி தனது தந்தையையும் இழந்தமையும் குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!