வரலாற்றில் இன்று…. பெப்ரவரி 25 நிகழ்வுகள்…!

0 229

1797: – வில்லியம் டேட் தலைமையிலான சுமார் 1500 போர்வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு படையினர் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.

1836: சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1837: தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1921: ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி, ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது.

1925: சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் ராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.

1932: அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.

1945: இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிக்கு எதிராக துருக்கி போர்ப் பிரகடனம் செய்தது.

1948: செக்ஸ்லோவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.

1951: முதலாவது பான் அமெரிக்க விளையாட்டு விழா ஆர்ஜென்டீனாவில் ஆரம்பமாகியது.

1956: சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.

1980: சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

1986: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ புதிய ஜனாதிபதியானார்

1988: மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.

1991: வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டெஹ்ரான் நகரில் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1991: வோர்ஸோ உடன்படிக்கை கைவிடப்பட்டது.

1992: அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.

1994: மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

2006: உலகின் மக்கள் தொகை 650 கோடியை கடந்தது.

2009: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் எல்லை பாதுகாப்புப் படையினர் தமது தலைமையகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் 50 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் உயிரிழந்தனர்.

2015: ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவினால் சுமார் 301 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!