போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு சென்ற ஜனாதிபதி பாராட்டு..!

0 365

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பணி­ய­கத்­துக்கு நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விஜயம் செய்து, இலங்கை வர­லாற்றில் பெருந்­தொ­கை­யாக கைப்­பற்­றப்­பட்ட ஹெரோ­யினைப் பார்­வை­யிட்­ட­துடன் கைப்­பற்­றிய பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பணி­யகம் மற்றும் பொலிஸ் அதி­ர­டிப்­ப­டையின் அதி­கா­ரி­க­ளுக்கும் பாராட்­டு­க­ளையும் தெரி­வித்­துள்ளார்.

அவர்­களின் சேவையை பாராட்­டிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாட்டின் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் இந்த உன்­னத பணிக்கு தனது ஆசீர்­வா­தமும், ஒத்­து­ழைப்பும் எப்­போதும் உண்டு எனத் தெரி­வித்­துள்ளார்.

பொலிஸ் அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப், பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்­ர­ம­ரத்ன, பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பணி­ய­கத்தின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி டீ.ஏ.சி.தன­பால ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டனர்.

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பணி­ய­கத்தை பார்வையிட்ட ஜனாதிபதி , கடந்த சுற்றி வளைப்புகள் தொடர்பிலான தகவல்களையும் கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!