இலங்கையில் முதல் தடவையாக இன்று செயற்கை மழை

0 595

இலங்கையில் முதல் தடவையாக செயற்கை மழை இன்று வெற்றிகரமாக பெய்விக்கப்பட்டுள்ளது.

மவுசாக்கலை நீர்த்தேக்கப் பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் இன்று செயற்கை மழை பெய்விக்கப்பட்டது.

இந்த செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான முன்னோடித் திட்டம்மானது இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் மேலாக சுமார் 8000 அடி உயரத்தில் மேகங்கள் மீது இரசாயனங்களை விசுறுவதற்காக இலங்கை விமானப்படையின் வை12 ரக விமானமொன்று பயன்படுத்தப்பட்டது.

தாய்லாந்தைச் சேர்ந்த பொறியியல் குழுவொன்றின் உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo