சீனாவின் நதிக்கரைகளில் 518 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரின எச்சங்கள் கண்டுபிடிப்பு!

0 690

சீனாவின் ஆற்­றங்­கரைப் பகு­தியில் ஆயி­ரக்­க­ணக்­கான தொல்­லுயிர் எச்­சங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இத் தொல்­லுயிர் எச்­சங்கள் 518 மில்­லியன் ஆண்­டுகள் பழ­மை­யா­னவை என்று கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பல்­வேறு உயி­ரி­னங்­களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்­புகள் உள்­ளிட்ட மென்­மை­யான திசுக்கள் மிகச் சிறப்­பாக கெடாமல் பாது­காக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக அரை­வா­சிக்கும் மேற்­பட்ட தொல்­லுயிர் எச்­சங்கள் இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத உயி­ரி­னங்­களைச் சார்ந்­தவை என்­பதால் பிரம்­மிக்­கத்­தக்­க­தாக இருப்­ப­தாக புதை­ப­டிவ ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

சீனாவின் ஹுபேய் மாகா­ணத்­தி­லுள்ள தனுஷி நதிக்­க­ரையின் குயிங்­ஜியாங் நாக­ரீக பகு­தியில் இத் தொல்­லுயிர் எச்­சங்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

20,000க்கும் அதி­க­மான மாதி­ரிகள் சேக­ரிக்­கப்­பட்­டன. இவற்றில் புழுக்கள், ஜெல்­லிமீன், கடல் பூக்கள் மற்றும் பாசிகள் உள்­ளிட்ட 4,351 மாதி­ரிகள் இது­வரை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

“உயி­ரி­னங்­களின் ஆரம்ப தோற்­றங்­களை ஆய்வு செய்­வதில் இவை மிக முக்­கி­ய­மான ஆதா­ரங்கள்” என சீன வடமேற்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் இவ் ஆய்வின் கள தலைவர்களுள் ஒருவருமான ஸிங்லியாங் ஸங் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!