பங்களாதேஷில் தீ விபத்து ; இலங்கையர் உட்பட 19 பேர் பலி!

0 121

பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்கா, பனானி பிர­தேச வணிக வளா­க­மொன்றில்இன்று நண்­பகல் ஏற்­பட்ட தீ விபத்தில் குறைந்­தது 19 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

இவ் விபத்­தினால் 70 பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­துடன், 19 மாடி­களைக் கொண்ட இக் கட்­ட­டத்­தினுள் பலர் சிக்கிக் கொண்­டுள்­ள­தாக அச்சம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கட்­ட­டத்தின் ஜன்னல் வழி­யாக பலர் தம்மைக் காப்­பாற்­று­மாறு கூச்­ச­லிட்­ட­தா­கவும், அவர்­களில் சிலர் கீழே குதித்­ததை அவ­தா­னிக்க முடிந்­த­தா­கவும் உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

இதே­வேளை, இத் தீ விபத்தில் இலங்­கையர் ஒரு­வரும் பலி­யா­கி­யுள்­ள­தாக பங்­க­ளா­தேஷின் ‘தி டெய்லி ஸ்டார் (The Daily Star) இணை­யத்­தளம் தெரி­வித்­துள்­ளது.

நிராஸ் சந்­திரா என்னும் இலங்­கை­யரே இவ்­வாறு பலி­யா­கி­யுள்­ள­தாக குரு­மி­டோலா பொது வைத்­தி­ய­சா­லையின் இயக்­குநர் பிரி­கே­டியர் ஜெனரல் காஸி ரஷீத் உன் நபி தெரி­வித்­துள்ளார்.

தீ விபத்தில் கடும் காயங்­க­ளுக்­குள்­ளான அவர் மாடியில் இருந்து கீழே குதித்­துள்­ள­துடன், வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்லும் வழி­யி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ் விபத்தில் காய­ம­டைந்த 41 பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் அவர்கள் கவ­லைக்­கி­ட­மான நிலையில் இல்லை எனவும் புகையை சுவா­சித்­ததன் கார­ண­மாக மூச்சுக்கோளாறு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

தீய­ணைப்பு வீரர்­க­ளுடன் இணைந்து கடற்­படை மற்றும் விமா­னப்­படை வீரர்­களும் மீட்புப் பணியில் ஈடு­பட்­டுள்­ள­துடன் தீ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கட்­ட­டத்­தி­னுள்ளே சிக்­கி­யுள்­ள­வர்­களை கூரைப் பகு­தி­யி­னூ­டாக மீட்­ப­தற்­காக விமா­னப்­ப­டையைச் சேர்ந்த ஹெலி­கொப்­டர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

ஹெலி­கொப்­டர்­க­ளி­­னூ­டா­கவும் கட்­ட­டத்தின் மீது நீரைப் பீய்ச்­சி­ய­டித்து தீயை அணைக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இன்று பகல் 1 மணி­ய­ளவில் கட்­ட­டத்தின் 8ஆவது மா­டியில் ஏற்­பட்ட தீ ஏனைய தளங்­க­ளுக்கும் விரை­வாகப் பர­வி­யது. கடும் போராட்­டத்தின் மத்­தியில் மாலை 4.45 மணி­ய­ளவில் தீ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டது. தீ விபத்து ஏற்­பட்­ட­மைக்­கான கார­ணத்தை உட­ன­டி­யாக அறிய முடியவில்லை.

பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் மோசமான கட்டட கட்டுமானங்கள் காரணமாக பங்களாதேஷில் பாரிய தீ விபத்துகள் ஏற்படுவது வழமை­யா­கி­யுள்­ளது.

அண்­மைய ஆண்­டு­களில் இவ்­வா­றான விபத்­து­க­ளினால் நூற்­றுக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo