தாய்வான், அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதிகளாகக் குறிப்பிடாத 30,000 வரைபடங்கள் அழிக்கப்பட்டன

0 95

தாய்வான் மற்றும் இந்­தி­யாவின் வட மாநி­ல­மான அரு­ணாச்­சலப் பிர­தேசம் ஆகி­ய­வற்றை தமது எல்­லைக்குள் உள்­ள­டக்­காத சுமார் 30,000 வரை­ப­டங்­களை சீன அதி­கா­ரிகள் கைப்­பற்றி அழித்­துள்­ளனர்.

சீனாவின் கிழக்குப் பகுதி மாகா­ண­மான ஷன்­டோங்­கி­லுள்ள குயிங்­டாவோ நகர சுங்க அதி­கா­ரிகள் 800க்கும் அதி­க­மான வரை­ப­டங்கள் அடங்­கிய பெட்­டி­களைக் கடந்த வாரம் கைப்­பற்­றி­யி­ருந்­தனர். குறித்த வரை­ப­டங்­களில் தனி நாடாகக் காண்­பிக்­கப்­பட்­டுள்ள தாய்வான் தமது இறை­யாண்­மைக்கு உட்­பட்ட பகுதி எனவும் அதனை தனி­யாகக் காண்­பிப்­பது சிக்­க­லா­னது எனவும் சீனா குறிப்­பி­டு­கி­றது.

‘தெற்கு திபெத்’ என சீனாவால் குறிப்­பி­டப்­படும் இந்­தி­யாவின் அரு­ணாச்­சலப் பிர­தேச மாநி­லத்­தையும் வரை­ப­டத்தில் தமது இறை­யாண்­மைக்­குட்­பட்ட பகு­தி­க­ளாகக் குறிப்­பிட வேண்டும் என அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
மொத்­த­மாக 28,908 வரை­ப­டங்கள் கைப்­பற்றி அழிக்­கப்­பட்­டுள்­ளன.

வரை­ப­டங்கள் அனைத்தும் சீனாவில் தயா­ரிக்­கப்­பட்­டவை என்­ப­துடன் பெயர் குறிப்­பி­டப்­ப­டாத வெளி­நா­டொன்­றுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட இருந்­த­தா­கவும் சீன தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

“வரை­பட சந்­தையில் சீனா செய்­தது சட்­ட­பூர்­வ­மா­னதும் அவ­சி­ய­மா­ன­து­மாகும். 

ஏனெனில் இறை­யாண்­மையும் பிராந்­திய ஒரு­மைப்­பாடும் நாட்­டுக்கு மிக முக்­கி­ய­மா­னவை.

தாய்வான் மற்றும் தெற்கு திபெத் (அரு­ணாச்­சலப் பிர­தேசம்) ஆகி­யன சீனாவின் ஒரு பகுதி என்பது சர்வதேச சட்டங்களின் படி மீறப்பட முடியாதது” என சீன வெளிவிவகாரப் பல்கலைக்கழக பேராசிரியர் லியூ வென்ஸோங் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo