நிரவ் மோடிக்கு பிணை கோருவதற்கு அவரின் நாயையும் பயன்படுத்திய வழக்கறிஞர்கள்

0 270

பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு பிணை கோருவதற்கு, அவருக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நெருக்கத்தை பயன்படுத்தினர். அவரின் செல்லப் பிராணியான நாயை பராமரிக்கும் விடயத்தையும் அவரின் வழக்கறிஞர்கள் பயன்படுத்தினர். எனினும், நிரவ் மோடியின் பிணை மனுவை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

48 வயதான கோடீஸ்வரர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி இந்திய ரூபா மோசடியும், மற்றும 11,600 கோடி இந்திய ரூபா சட்டவிரோத பரிவர்த்தனை, அமெரிக்கத் தொழிலதிபரிடம் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரவ் மோடி மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 13 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்று லண்டனில் தஞ்சம் அடைந்த நிரவ் மோடியை கைது செய்யுது மீண்டும் நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. லண்டனில் கடந்த 20 ஆ ம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிரவ் மோடிக்கும் அவரின் வளர்ப்பு நாய்க்கும் இடையிலான நெருக்கத்தையும் பிணை கோருவதற்கான ஒரு காரணமாக நிரவ் மோடியின் வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.

நிரவ் மோடியின் வழக்கறிஞர் கிளேர் மொன்ட்கொமேறி வாதாடுகையில், நிரவ் மோடியின் மகன் லண்டன் சாட்டர்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்றார். தற்போது அவர் பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்துள்ளார். தனது பெற்றோர்

முதுமையடைந்தமைக்கான அறிகுறியினால், நிரவ் மோடி நாயை வளர்க்க ஆரம்பித்தார். இந்த நடவடிக்கைகள் எதுவும் அவர் நாட்டை (பிரிட்டனை) விட்டு தப்பிச் செல்லக்கூடியவர் என்பதை காட்டவில்லை என்றார்.

அப்போது, அவருக்குப் பிணை வழங்கப்பட்டால் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிவான் எம்மான் அர்புத்னொட், நிரவ் மோடியின் பிணை மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo