மோடிக்கு எதிராக போட்டியிடும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்!

0 213

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசித் தொகுதியில், இந்திய முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் போட்டியிடவுள்ளார்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக 2017 ஜனவரி மாதத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டவர்தான் பி.எஸ்.எப் வீரர் தேஜ் பகதூர் யாதவ்.

யாதவின் குற்றச்சாட்டு, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லையில் காவலில் இருக்கும் இராணுவ வீரர்களின் பெயரைச்சொல்லியே ஆட்சி நடத்தும் மோடியின் அரசாங்கம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு முறையான உணவுகூட கொடுக்கவில்லையே என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

பின்னர், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து தேஜ் பகதூர் யாதவ பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது வாரணாசியில் இந்தியப பிரதமர் நரேந்திரடி மோடிக்கு எதிராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

‘வெற்றி தோல்வி குறித்து நான் கவலைப்படவில்லை. இந்த அரசு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால், வீரர்களின் பெயரைச்சொல்லி வாக்கு கேட்க மட்டும் செய்கிறார்கள். மேலும், எல்லைப்பாதுகாப்புப் படையினரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியதற்காக என்னை ‘மனநலம் குன்றியவர்’ என உயர் அதிகாரிகள் முத்திரை குத்தினார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo