ஊழல்களுக்கு எதிராக போராடிய ஸுஸானா, ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாகத் தெரிவு

0 127

ஊழ­லுக்கு எதி­ரான வழக்­க­றிஞர் ஸுஸானா கப்­பு­டோவா ஸ்லோவாக்­கி­யாவின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் 45 வய­தான ஸுஸானா கப்­பு­டோவா 58.4 வீத வாக்­கு­களைப் பெற்­றுள்­ள­துடன், 52 வய­தான ஐரோப்­பிய ஒன்­றிய சக்­தி­வள துணை ஆணை­யாளர் மாரோஸ் செஃப்­கோவிக் 41.6 வீத வாக்­கு­களை மட்­டுமே பெற்­றுள்ளார்.

“நம்மை இணைப்­பது எது என்­பதைப் பாருங்கள். எமது தனிப்­பட்ட நலன்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­துவோம்” என தேர்தல் வெற்­றிக்குப் பின்னர் கப்­பு­டோவா தெரி­வித்தார். “எதி­ரி­களைத் தாக்­காமல் நீங்கள் வெற்றி பெற முடியும். அடுத்து நடை­பெ­ற­வுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தேர்­த­லிலும் அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள ஸ்லோவாக்­கிய நாடா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இந்த போக்கு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என நம்­பு­கிறேன்” என ஸுஸானா கப்­பு­டோவா குறிப்­பிட்டார்.

தனது சொந்த ஊரில் கழிவுப் பொருட்­களை இடு­வ­தற்­கான நிலப்­ப­ரப்பை உரு­வாக்கும் செயற்­றிட்­டத்தை வெற்­றி­க­ர­மாகத் தடுத்­த­மைக்­காக 2016ஆம் ஆண்டில் ஸுஸானா கப்­பு­டோ­வா­வுக்கு விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது. கப்­பு­டோ­வாவின் வருங்­கால கண­வ­ரான ஊட­க­வி­ய­லாளர் ஜான் குசியாக் 2018ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து அவர் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அர­சாங்­கத்தின் உயர்­மட்­டத்தில் காணப்­படும் ஊழல் தொடர்பில் புல­னாய்வு செய்து வந்த நிலை­யி­லேயே குசியாக் சுட்டுக் கொல்­லப்­பட்டார். தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் எண்­ணத்தை ஒரு போதும் கொண்­டி­ருக்­க­வில்லை என்று தெரிவித்திருந்த கப்புடோவா, தனது வருங்கால கணவர் கொல்லப்பட்டமையை அடுத்து ஊழலை ஒழிப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் முடிவை மேற்கொண்டிருந்தாக கூறியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo