வென்டேஜ் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டம் : 2019 முஸ்லிம் பிரதேச கழகங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு

0 152

(நெவில் அன்தனி) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் வென்டேஜ் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் அம்பாறை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, கிண்ணியா, பேருவளை, களுத்துறை, புத்தளம், கேகாலை, கம்பளை, நாவலப்பிட்டி, மாவனெல்லை, கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களைத் தலைவர்களாகக் கொண்ட பல விளயைாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றன.

பொதுவாக பெரும்பாலான கழகங்களில் நிருவாகமாக இருக்கட்டும் வீரர்களாக இருக்கட்டும் முஸ்லிம் சமுகத்தவர்களின் பங்களிப்பு பெருமளவில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தேசிய மற்றும் கனிஷ்ட தேசிய அணிகளிலும் முஸ்லிம் வீரர்கள் அதிகளவில் இடம்பெறுகின்றமை பாராட்டத்தக்கது.

இவ் வருடப் போட்டிகள் கடந்த வருடத்தைப் போன்றே மூன்று கட்ட்களைக் கொண்டது. முதலாம் கட்டம் அந்தந்த கால்பந்ந்தாட்ட லீக்குகளில் அங்கம் வகிக்கும் கழங்களுக்கு இடையில் நடத்தப்படும். 7 கழகங்களை அல்லது அதற்குக் கீழ் அங்கத்துவம் கொண்ட லீக்குகள் இன்னும் ஒரு லீக்குடன் இணைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். லீக் மட்ட போட்டிகள் நிறைவடைந்ததும் 64 அணிகள் மாவட்ட மட்ட நொக் அவுட் போட்டியில் விளையாடும்.

அவற்றில் வெற்றிபெறும் 32 அணிகள் கடந்த வருடம் கடைசி 64 அணிகள் சுற்றில் வெற்றபெற்ற 32 அணிகளுடன் இணைந்து தேசிய மட்ட நொக் அவுட் சுறறில் விளையாட தகுதிபெறும்.

இம் முறை சம்பியனாகும் அணிக்கு வென்டேஜ் கிண்ணத்துடன் 750,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 500,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். அத்துடன் சம்பியன் அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணி வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும் சூட்டப்படும்.

நாடு முழுவதிலுமிருந்து 827 கழகங்கள் எவ்.ஏ.கிண்ண நொக் அவுட் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் இலங்கையில் கால்பந்தாட்டம் எந்தளவு பிரசித்துபெற்றுள்ளது புலனாவதாக இப் போட்டிக்கு இரண்டாவது வருடமாக அனுசரணை வழங்கும் எபொனி ஹோல்டிங்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் அதிபர் ரஸ்மி ரஹீம் தெரிவித்தார்.

இளம் பராயத்தில் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டதால் கால்பந்தாட்டத்தை அதிகமாக நேசிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கால்பந்தாட்ட விளையாட்டை நம் தேசத்தில் பிரபல்யம் அடையச் செய்து இலைமறைகாய்களாக இருக்கும் கால்பந்தாட்ட வீரர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதை நோக்கமானக் கொண்டே எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டத்துக்கு அனுசரணை வழங்க முன்வந்ததாகவும் கூறினார்.

‘‘ஆடவர் ஆடைகளில் பிரசித்திபெற்ற பெயர் வென்டேஜ் ஆகும். இப் பெயரைக் கொண்ட கிண்ணத்துக்காக நடத்தப்படும் இலங்கை கால்பந்தாட்டத்தில் அதி உயரிய எவ்.ஏ. கிண்ணப் போட்டிக்கு அனுசரணை வழங்குவதில் பெருமை அடைகின்றோம்” என்றார்.

(MO5)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!