தனது மகளின் மரணத்துக்கு மருமகனின் பாரிய ஆணுறுப்பே காரணம் என முறைப்பாடு செய்த நபர்

0 629

இ ந்­தோ­னே­ஷி­யாவைச் சேர்ந்த ஒருவர், தனது மரு­ம­கனின் பாரிய ஆணு­றுப்பு கார­ண­மாக தனது மகள் உயி­ரி­ழந்­துள்ளார் என அந்­நாட்டுப் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

கிழக்கு ஜாவா மாகா­ணத்­தி­லுள்ள மரோன் மாவட்­டத்தில் வசிக்கும் 55 வய­தான நேதி சிட்டோ என்­ப­வரே இவ்­வாறு முறைப்பாடு செய்­துள்ளார்.

நேதி சிட்­டோவின் மக­ளான 23 வய­தான யுவதி, சில மாதங்­க­ளுக்­குமுன், அவரின் வீட்­டி­லள்ள கட்­டிலில் உயி­ரி­ழந்த நிலையில் காணப்­பட்டார்.

இந்­நி­லையில், அந்த யுவ­தியின் கணவர் பாரிய ஆணு­றுப்பை உடை­யவர் எனவும், இதனால் பாலியல் உற­வின்­போது, அந்த யுவதி இறந்­து­விட்டார் எனவும் உள்­ளூர்­வா­சிகள் பேசிக்­கொண்­டதை நேதி சிட்டோ கேள்­விப்­பட்டார்.

இதை­ய­டுத்து உள்ளூர் பொலி­ஸா­ரிடம் தனது மரு­ம­க­னுக்கு எதி­ராக அவர் முறைப்­பாடு செய்தார். தனது மரு­ம­கனின், அசா­தா­ர­ண­மான பாரிய ஆணு­றுப்பே தனது மகளின் மர­ணத்­துக்குக் காரணம் என நேதி சிட்டோ தனது முறைப்­பாட்டில் தெரி­வித்தார்.

நேதி சிட்டோ (வலமிருந்து இரண்டாவது)


இதை­ய­டுத்து, அவரின் மரு­ம­கனின் ஆணு­றுப்பைச் சோதனை செய்ய அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­தனர். உற­வி­னர்கள் மற்றும் கிராமத் தலை­வரின் முன்­னி­லையில் தனது ஆணு­றுப்பை காண்­பிப்­ப­தற்கு நேத்தி சிட்­டோவின் மரு­மகன் நிர்ப்பந்திக்கப்­பட்டார்.

எனினும், அம்­ம­ரு­ம­கனின் ஆணு­றுப்­பா­னது சரா­சரி அள­வு­டை­யதே என அதி­கா­ரிகள் கண்­ட­றிந்­தனர் என பொலிஸ் குற்ற விசா­ரணைப் பிரிவு தலைமை அதி­கா­ரி­யான ரையன்டோ தெரி­வித்­துள்ளார்.

பின்னர், தனது குற்­றச்­சாட்டை நேதி சிட்டோ வாபஸ் பெற்றார் எனவும், அவரும் மருமகனும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரினர் எனவும் பொலிஸ் அதிகாரி ரையன்டோ தெரிவித்துள்ளார்.

(MO5)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!