எல்லாளன் படையைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் கைது!

0 298

                                                                                                            (கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு, வாள்கள், மற்றும் போதைப் பொருளுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்ததுடன் கைக்குண்டு -01, ரி. 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள் – 10, வாள்கள் -03 மற்றும் போதைப் பொருள் ஆகியனவற்றைக் கைப்பற்றினர்.
எல்லாளன் படைப் பிரிவைச் சேர்ந்தவர் என தன்னை இவர் அறிமுகப்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!