தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிக்கிய மூவருக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடைவிதிப்பு

0 115

லண்டன் 2012 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றிய 3 விளை­யாட்டு வீரர்கள் தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் சிக்­கி­யதால் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஒலிம்பிக் குழு உறுதி செய்­துள்­ளது.

தடை­செய்­யப்­பட்ட அன­போலிக் ஸ்டீரொய்ட் ஊக்­க­ம­ருந்தை பாவித்­தமை பல்­கே­ரி­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட அஸர்­பய்ஜான் பளு­தூக்கல் வீரர் வெலன்டின் ஹ்ரிஸ்­டோவின் சிறுநீர் மாதிரி பரி­சோ­த­னையில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இவர் ஆண்­க­ளுக்­கான 56 கிலோ கிராம் எடைக்­குட்­பட்ட பிரிவில் வெண்­கலப் பதக்கம் வென்­றி­ருந்தார்.

அத்­துடன் பெலா­ரு­சி­யாவைச் சேர்ந்த அலெனா மட்­டோஷ்கா, அனிஸ் அனா­னெகா ஆகி­யோரும் தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் சிக்­கி­யதால் தடைக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இம்­மூ­வரும் விளை­யாட்­டுத்­துறை நியா­யா­திக்க சபை அல்லது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஓழுக்காற்று விசாரணை முன்னிலையில் தோன்றவுள்ளனர்.

 

 

(M02)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!