பிரெக்ஸிட் ஒத்திவைக்கப்பட்டது; நான்காவது முறையாகவும் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த தெரெசா மே திட்டம்

0 74

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரித்­தா­னியா வெளி­யேறும் திகதி எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக, கடந்த வெள்­ளிக்­கி­ழமை, மார்ச் மாதம் 29ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு பிரித்­தா­னியா திட்­ட­மிட்­டி­ருந்­தது.

எனினும் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பிரெக்ஸிட் வரைவு ஒப்­பந்­தத்தின் மீது இடம்­பெற்ற நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்பில் மூன்­றா­வது தட­வை­யா­கவும் பிரித்­தா­னிய அர­சாங்கம் தோல்­வியைத் தழு­வி­யுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்குத் தீர்­மா­னித்த பிரித்­தா­னிய அர­சாங்கம், 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடாத்­தி­யது.

பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்­களில் 71.8 வீத­மானோர் இதில் வாக்­க­ளித்­தனர். ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வெளி­யேறும் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வாக 51.9 வீத­மா­னோரும் எதி­ராக 48.1 வீத­மா­னோரும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை பிர­தமர் தெரெசா மே தலை­மை­யி­லான பிரித்­தா­னிய அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்­தது.பிரெக்ஸிட் வரைவு ஒப்­பந்தம் மீதான நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்­புகள் இவ்­வாண்டு ஆரம்பம் முதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

பிர­தமர் தெரெசா மே முன்­வைத்த பிரெக்ஸிட் வரைவு ஒப்­பந்தம் மீதான முத­லா­வது நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்பு 230 வாக்­கு­க­ளாலும் இரண்­டா­வது வாக்­கெ­டுப்பு 149 வாக்­கு­க­ளாலும் தோற்­க­டிக்­கப்­பட்­டன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மூன்­றா­வது முறை­யாக நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பு 344–286 என்னும் அடிப்­ப­டையில் 58 வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்­டது.

இந்த நிலையில், ஐரோப்­பிய ஒன்­றியம் ஏப்ரல் 12ஆம் திகதி வரை பிரித்­தா­னி­யா­வுக்கு அவ­காசம் வழங்­கி­யுள்­ளது. பிரெக்ஸிட் வரைவு ஒப்­பந்தம் மீதான நான்­கா­வது நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்பு இவ்­வாரம் இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் அர­சாங்கம் வெற்றி பெற்றால் புதிய வரைவு ஒப்­பந்­தத்தை ஏற்றுக் கொள்­வதா இல்­லையா என்­பது குறித்து ஏப்ரல் 10ஆம் திகதி ஐரோப்­பிய ஒன்­றியம் கூடி ஆராயும்.

அதனை ஐரோப்­பிய ஒன்­றியம் ஏற்றுக் கொண்டால் மே மாதம் 22ஆம் திகதி வரை பிரித்­தா­னி­யா­வுக்கு கால அவ­காசம் வழங்­கப்­படும். எனினும் வாக்­கெ­டுப்பில் பிரித்­தா­னிய அரசு வெற்றி பெறத் தவ­றினால் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஒப்­பந்தம் ஏதுமின்றி வெளியேறுதல் அல்லது நீண்ட காலத்துக்கு பிரெக்ஸிட்டை ஒத்திவைத்தல் ஆகிய இரண்டில் ஒன்று தெரிவு செய்யப்படலாம். மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஐரோப்­பிய ஒன்­றிய நாடா­ளு­மன்றத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

(M04)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo