ஆடைகள் விற்பனை செய்வதற்காகச் சென்ற வீட்டில் தங்க நகைகளை அபகரித்த இந்திய பிரஜைகள் கைது

0 146

(மயூரன்)

யாழ். ஊர்­கா­வற்­றுறை – கரம்பன் பகு­தியில் உள்ள வீடு ஒன்­றுக்கு ஆடைகள் விற்­ப­னைக்­காக சென்று வீட்­டி­லி­ருந்த நகை­களை அப­க­ரித்­த­தாகக் கூறப்­படும் இரு இந்­தி­யர்­களை ஊர்காவற்­றுறை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த இரு இந்­தி­யர்­களும் கரம்பன்- நாரந்­தனை பகு­தி யில் ஆடைகள் வியா­பா­ரத்­துக்­காகச் சென்­றி­ருந்த நிலையில் வீட்டில் தனி­மை­யி­லி­ருந்த பெண்­களின் நகை­களை மிகச் சூட்­சு­ம­மாக அப­க­ரித்துச் சென்­றுள்­ளனர்.

இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மண்­டை­தீவு பொலிஸ் காவ­ல­ர­ணுக்கு பொறுப்­பான உப பொலிஸ் பரி­சோ­தகர் விவே­கா­னந்தன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கு அறி­வித்­தனர்.

இத­ன­டிப்­ப­டையில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி வீர­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக, அப­க­ரிக்­கப்­பட்ட நகைகள், பொருட்­க­ளுடன் யாழ்ப்­பாணம் நோக்கிச் சென்ற இரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர்.

குறித்த நபர்­க­ளி­ட­மி­ருந்து நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், இந்திய நாணயங்கள், ஓலைச் சுவடிகள் என்பன கைப்பற்றப்பட்டன.

(M04)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!