பொரளை போக்குவரத்து OIC விபத்து தொடர்பில் கைதான சந்தேக நபருக்கு பிணை

0 126

அண்மையில் பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டிபெண்டர் சாரதி நவிந்து ரத்னாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, தலா 5 இலட்சம் ரூபா அடங்கலான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் ஷலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

பம்­ப­லப்­பிட்­டியில் கடந்த பெப்­ர­வரி 24 ஆம் திகதி அதி­கா­லையில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, டிபெண்டரொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி படு­கா­ய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 14 நாட்­க­ளாக சிகிச்சை பெற்­று­வந்த பொரளை பொலிஸின் போக்­கு­வ­ரத்துப் பிரிவு பொறுப்­ப­தி­காரி, ஆனந்த சாகர சரத்­சந்­திர (51) கடந்த மார்ச் 9 ஆம் திகதி இரவு உயி­ரி­ழந்­தார்.

இத­னை­ய­டுத்து விபத்­துக்கு கார­ண­மான டிபெண்டர் சார­தி­யான பிர­மு­கர்கள் பாது­காப்பு பிரிவின் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரதீப் ரத்­னா­யக்­கவின் மகன் நவிந்து ஒமேஷ் ரத்­­நா­யக்க (27) முதலில் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­தி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து அன்­றி­ரவே, மேற்­படி டிபெண்­டரின் உரி­மை­யா­ள­ரான ரஞ்­சி­கொ­ட­ஆ­ரச்­சிகே விசித சிறி விஜே­கொட (27) என்­ப­வரும், பின்னால் பய­ணித்த NW CAX 7557 என்ற இலக்­கத்தைக் கொண்ட ப்ராடோ ரக ஜீப்பின் உரி­மை­யா­ள­ரான கொள்­ளுப்­பிட்­டியைச் சேர்ந்த துமிந்த சுதம்­மிக ஆட்­டி­கல (28) (கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர்) மற்றும் அதில் பய­ணித்த பெபி­லி­யா­னவைச் சேர்ந்த கிரன் மெத்­தியூ தனிஸ் (23) என மூவர் பம்­ப­லப்­பிட்டி பொலிஸில் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து கைது­செய்­யப்­பட்­டனர்.

அத்­துடன், குறித்த இரு வாக­னங்­களில் பய­ணித்த ஏனை­யோ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கேயின் மக­னான ரனிஸ்க பண்டா அளுத்­க­மகே (26), சேசித ரன்­தீப குண­தாஸ (28), ஹேவாகே துலாஞ்­சன சாமர தாபரே (28) மற்றும் விந்­தியா விஷ்­வ­ஹா­ஷினி (27) ஆகியோர் சம்­பவ தினத்­துக்கு மறுநாள் பொலிஸில் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து கைது­செய்­யப்­பட்­டனர்.

இச்­சந்­தே­க­ந­பர்கள் 8 பேரும் கடந்த பெப்­ர­வரி 25 ஆம் திகதி கொழும்பு பிர­தம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். அதன்­போது, விபத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டு தப்­பிச்­சென்ற டிபெண்­டரின் சாரதி மாத்­திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், ஏனைய ஏழு பேரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(M02)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!