ஸ்பெய்னிலுள்ள தூதரகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை பயங்கரவாதத் தாக்குதல் என வட கொரியா தெரிவிப்பு

0 68

பெப்­ர­வரி மாதம் ஸ்பெய்னின் மட்­ரிட்­டி­லுள்ள தமது தூத­ர­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ‘திடீர் சோதனை நட­வ­டிக்கை’ கடு­மை­யான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் என வட கொரியா தெரி­வித்­துள்­ளது.

குறித்த சோதனை நட­வ­டிக்கை தொடர்பில் விசா­ரணை தேவை என வட கொரியா வெளி­யிட்­டுள்ள முத­லா­வது உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கையில் கோரி­யுள்­ள­துடன், ஸ்பெய்ன் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திற்கு இச் சம்­ப­வத்­துடன் காணப்­படும் தொடர்பு குறித்து உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

வட கொரிய ஜனா­தி­பதி கிம் ஜோங் உன்னை பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு முயற்­சித்து வரும் ‘செல்­லோ­மியா மக்கள் பாது­காப்பு’ என்னும் அமைப்பு தாமே குறித்த திடீர் சோதனை நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­த­தாக கடந்த புதன்­கி­ழமை அறி­வித்­தி­ருந்­தது.

குறித்த அமைப்பு புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு என்று குறிப்­பிட்டு தூத­ர­கத்­தி­லி­ருந்த கணி­னிகள் மற்றும் ஆவ­ணங்­களை எடுத்துச் சென்­றுள்­ளது. “ஆயு­த­மேந்­திய குழு­வினர் ஸ்பெய்­னி­லுள்ள வட கொரிய தூத­ர­கத்தைத் தாக்­கி­யுள்­ளனர். பெப்­ர­வரி மாதம் 22ஆம் திகதி கடு­மை­யான பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது” என வட கொரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(M04)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo