சீன காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் பலி

0 189

 

சீனாவில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிய 30 தீயணைப்பு வீரர்கள் உடல் கருகி பலியாகினர்.

தென்மேற்கு சீனாவின் காட்டுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 3800 மீற்றர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென காட்டுத் தீ வேகமாகப் பரவியது.

இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். தீயணைக்கும் பணியில் சுமார் 100 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

12 மணிநேரத்திற்கும் மேலாக காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் மிகக் கடுமையயாகப் போராடினர். அதன் பின்னர் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படவே, தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது. நேற்று   அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இரு தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது 30 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo