மதுபோதையில் 7 வாகனங்களை சேதப்படுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக மும்பையில் நடிகை மீது வழக்கு

0 809

மதுபோதையில் வாகனம் செலுத்தி, 7 வாகனங்களை சேதப்படுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக இந்திய தொலைக்காட்சி நடிகை  ரூஹி ஷைலேஷ்குமார் சிங் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மும்பையில் நேற்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயதான ரூஹி ஷைலேஷ்குமார் சிங் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர். இவர் தனது நண்பர்களுடன் உணவமொன்றுக்குச் சென்றிருந்தபோது, அவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பொலிஸார் வந்தபோது, பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரை நடிகை ரூஹி ஷைலேஷ்குமார் சிங், திட்டி அவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

பின்னர், காரை செலுத்திக்கொண்டு தப்பிச் சென்ற நடிகை ரூஹி ஷைலேஷ்குமார் சிங்கை பொலிஸார் துரத்தினர். 

இதன்போது, அக்கார் நடிகை ரூஹி ஷைலேஷ்குமார் சிங்கின் கட்டுப்பாட்டை இழந்தது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. 3 கார்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் இதனால் சேதமடைந்தன. 

இச்சம்பவம் தொடர்பாக, ரூஹி ஷைலேஷ்குமார் சிங்கின் நண்பர்களான ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியமை தொடர்பில் ரூஹி ஷைலேஷ்குமார் சிங்குக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடிகை ரூஹி ஷைலேஷ்குமார் சிங்கும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!