IPL  வரலாற்றில் மிக இளம்  வீரர் ப்ரயாஸ் ரே பார்மன்

0 351

இண்டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்யில் றோயல் அணி சார்பாக விளையாடும் ப்ரயாஸ் ரே பார்மன் மிகக் குறைந்த வயதில் விளையாடும் வீரர் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டுள்ளார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் விளையாடியபோது அவரது வயது 16 ஆண்டுகள் 157 நாட்களாகும்.

இதற்கு முன் கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் மிகக் குறைந்த வயதில் (17 ஆண்டுகள் 11 நாட்கள் ) ஐ.பி.எல். போட்டியில் விளையாடியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

இந்தியாவின் 19 வயதுக்குட்டபட்ட அணியில் இடம்பெற்ற ப்ரயாஸ், ‘லெக் ஸ்பின்’  சுழற்பந்துவீச்சில் அசத்திவருவதுடன் துடுப்பாட்டத்திலும் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அவரை இந்திய நாணயப்படி 1.5 கோடி ரூபாவுக்கு வாங்கியிருந்தது

தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய ப்ரயாஸ், 24 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்றதுடன், 4 ஓவர்கள் பந்துவீசி 56 ஓட்டங்களைக் கொடுத்தார். அவரால் விக்கெட் எதனையும் கைப்பற்ற முடியாமல்போனது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!