200 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து 27 பேர் காயம்: வீடும் சேதம்

0 264

                                                                                                           (எம். செல்வராஜா)

பூனாகலையிலிருந்து – கொஸ்லந்தை நோக்கிவ் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பெட்டிகலை என்ற இடத்தில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று (03) பகல் இடம்பெற்ற இவ்விபத்தில், பஸ் சாரதி, நடத்துனர் உட்பட 27 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையிலும் 7 பேர் பதுளை அரசினர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சிறு காயங்களுக்கு உள்ளான 10 பயணிகள் கொஸ்லந்தை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

குறித்த பஸ் 200 அடி பள்ளத்தில் வீழந்த போது அங்கிருந்த வீடும் சேதமடைந்துள்ளது. பண்டாரவளைப் பொலிஸார் இவ்விபத்து குறித்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!