உலகில் முதல் முறையாக தென் கொரியாவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகம்

0 402

உலகில் முதல் முறை­யாக தென் கொரியா தனது நாட்டில் 5ஜி (5 G) அலைக்­கற்றை தொலைத்­தொ­டர்பு சேவை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சாம்சுங் நிறு­வ­னத்தின் 5ஜி வசதி கொண்ட ‘கேலக்ஸி எஸ் 10’ திறன்­பே­சி­யுடன் இணைந்­த­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்த சேவை அறி­முகம் செய்­யப்­பட்­டது.

சீனா, அமெ­ரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­களை முந்தி தென்­கொ­ரியா 5ஜி சேவையை வணி­க­ரீ­தி­யான பாவ­னைக்­காக முதன்­மு­தலில் வழங்­கி­யுள்­ளது.

“தென் கொரிய வாடிக்­கை­யா­ளர்­களின் உயர்­தர வேகம் மற்றும் படத்தின் தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்கள் சேவை­க­ளையும் வலை­ய­மைப்­பு­க­ளையும் வழங்கி வரு­கின்­றன” என 5ஜி சேவை அறி­முக நிகழ்வில் எஸ்.கே தொலைத்­தொ­டர்பு நிறு­வன துணைத் தலைவர் ரியூ யோங் சங் தெரி­வித்தார்.

5 ஜி சேவை­யா­னது 4 ஜி சேவையை விட 20 மடங்கு வேக­மா­ன­தாக இருப்­ப­துடன், 100 மடங்கு வேக­மான சேவையை வழங்கக் கூடிய ஆற்­றலும் காணப்­ப­டு­கி­றது. கே பொப் பாட­கர்கள் மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வீரர்­களை தனது முத­லா­வது 5 ஜி வாடிக்­கை­யா­ளர்­க­ளாக எஸ்.கே தொலைத்­தொ­டர்பு நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

எஸ்.கே தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மா­னது அதன் 27 மில்­லியன் வாடிக்­கை­யா­ளர்­களில் 1 மில்­லியன் வாடிக்கையாளர்களை 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 ஜி வாடிக்கையாளர்களாக இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!