கரடியனாறு ஈரளக்குளத்தில் கட்டுத் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி!

0 153

மட்டக்களப்பு , கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஒருவர் கொண்டு சென்ற துப்பாக்கி வெடித்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு (03) உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான நேற்று மாலை தனது கட்டுத் துப்பாக்கியுடன் காட்டுக்கு இவர் சென்றுள்ளார், அதன்போது தனது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். (வவுணதீவு எஸ்.சதீஸ் ) (M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!