ஏப்ரல் 5 முதல் 15 வரை  அதிகூடிய வெப்பநிலை நிலவும்! தண்ணீரை அதிகம் அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

0 1,061

 ( ஐ. ஏ. காதிர் கான் )

இந்த வாரத்தில்  அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு,  வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கமைய,  ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான  காலப்பகுதியில்,  இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும்.  இக்காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேர  வேளைகளில்,  அதிகூடிய வெப்ப நிலை நிலவும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

  எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 இந்த வெப்பமான காலப்பகுதியில்,  தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும்,  பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹா, அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை ஆகிய  மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை “சுட்டி” எனப்படும் உடல் வெப்பநிலை,  பாரிய அளவில் அதிகரிக்கலாம் என்றும்  வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!