737 ரக விமானத் தயாரிப்புகளைக் குறைப்பதாக போயிங் அறிவிப்பு: 737 MAX 8 விபத்துகளின் எதிரொலி

0 402

போயிங் 737 விமானங்களின் தயாரிப்பு எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியா மற்றும் இந்தோனேஷியாவில்ரக விமானங்கள் அண்மையில் விபததுக்குள்ளான நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானங்களை 1967 ஆம் ஆண்டு முதல் பறந்து வருகின்றன. இவற்றில் புதிய தலைமுறை விமானமாக போயிங் 737 மெக்ஸ் 8 ரக விமானங்கள் 2016 முதல் பறக்க ஆரம்பித்தன.

ஆனால், 5 மாத இடைவெளியில் புதிய போயிங் 737 மெக்ஸ் 8 விமானங்கள் இந்தோனேஷியாவிலும் எத்தியோப்பியாவிலும் விபத்துக்குள்ளாகின. அதையடுத்து இவ்விமானங்களின் பறப்புகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு மாதத்தில் தயாரிக்கப்படும் போயிங் 737 ரக விமானங்களின் எண்ணிக்கையை 52 இலிருந்து 72 ஆக குறைக்கவுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ரகத்தை (Boeing 7 Max 8) சேர்ந்த விமானங்களின் விநியோகத்தை இடைநிறுத்துவதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!