குழந்தைகளுக்கு சரியான உணவு அட்டவணை எது?

0 408

ஒரு குழந்தை மண்ணில் பிறந்­த தில் இருந்து தனது வளர்­ இளம் பரு­வத்தை எட்­டும்­வரை உணவுத் தேவைக்கு பெற்­றோர்­களை நம்­பியே இருக்­கி­றது.பிறந்த ஆறு­மாதம் கட்­டாயம் தாய்ப்பால் மட்டும் கொடுக்­கப்­ப­டு­கி­றது .இதை Exclusive Breast Feeding என்போம்.

Dr.ஃபரூக் அப்துல்லா

இந்த தாய்ப்­பாலில் நிறைந்­தி­ருப்­பது என்ன?
தாய்ப்­பாலில் இரண்டு வகை
இருக்­கி­றது.   
1.முன் சுரக்கும் பால் (fore milk)
2.பின் சுரக்கும் பால் (hind milk)

குழந்தை பால் உறிஞ்சத் தொடங்கு­கையில், முன் சுரக்கும் பாலில் அதிக தண்­ணீரும் க்ளூகோசும் இருக்கும். இது குழந்­தைக்கு ஏற்­படும் தாகத்தை சரி­செய்து விடும்.

பிறகு சுரக்கும் பின் பாலில் கொழுப்பு நிறைந்­தி­ருக்கும் இது குழந்­தையின் பசியை போக்கும். இப்­படி குழந்தை பிறந்த முதல் ஆறு­மா­தங்கள் கழிந்து­வி­டு­கின்­றன.

அதன் பிறகு எப்­படி உணவைகொடுப்­பது?செயற்கை உண­வு­களில் பெரும்­பான்மையாக சேர்க்­கப்­ப­டு­வது சர்க்­க­ரையே ஆகும். இந்தச் சர்க்­கரை தான் இனிப்பு சுவையைக் கொடுத்து குழந்­தையை அதி­க­மாக உண்ண வைத்து கொழுக்க வைக்­கி­றது.மற்­றப்­படி முக்­கால்­வாசி செயற்கை உண­வு­களில் இருப்­பது நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமை தான்.

ஆகவே, நமது குழந்­தை­க­ளுக்கு பிசைந்த அரிசிச் சாதம் கொடுக்­க லாம்.வேக வைத்த உண­வான இட்லி கொடுக்­கலாம்.பசுவின் பால் பெரும்­பா­லான நமது குழந்­தை­க­ளுக்கு எந்தப் பிரச்­ச­னையும் இல்­லாமல் ஒத்­துக்­கொள்­கி­றது.

இருப்­பினும் பசுவின் பாலை ஒரு­வ­ய­துக்கு பின் அறி­மு­கப்­ப­டு த்து­வது சிறந்­தது.அசைவ உணவு வகை­களில் ஆறு மாதம் சென்ற பின் முதலில் ஆரம்­பிக்­கப்­பட வேண்­டி­யது “முட்­டையின் மஞ்சள் கரு”முட்டை போன்ற ஒரு சிறந்த புர­தச்­சத்­துள்ள பொருளை பாரினில் காண முடி­யாது.

முட்­டையில் உள்ள புரதம் மிகவும் தலை சிறந்த ஹை க்வாலிட்டி புர­த­மாகும். இதை உடல் கிட்­டத்­தட்ட 100 சத­வி­கிதம் கிர­கித்­து­விடும்.அடுத்து… மீன் வகை­களை அறி­மு­கப்­ப­டுத்­தலாம். மீனை அவித்து கொடுக்­கலாம்.
ஏழு – எட்டு மாதம் நடக்கும் போது இறைச்சி சூப் செய்து ஊட்­டலாம்.

நன்­றாக சமைத்த ஆட்டு ஈரலை சோற்றோடு பிசைந்து ஊட்­டலாம். தேவை­யான இரும்­புச்­சத்து கிடைக்கும்.
சர்க்­கரை கலந்த செயற்கைப் பண்­டங்­களை தவிர்ப்­பது நல்­லதுபாண், மிட்­டாய்­களை இயன்­ற­வரை தவிர்ப்­பது நல்­லது.வாரம் ஒரு முறை விடு­முறை தினங்­களில் சொக்லேற் கொடுக்­கலாம்.குழந்­தை­களை பழங்கள் விச­யத்தில் தடுக்கத் தேவை­யில்லை.

அவர்கள் விரும்பும் பழங்­களை தினமும் கொடுக்­கலாம்.காய்­க­றி­களை சாலட்/ சூப் போன்று செய்து குழந்­தை­க­ளுக்கு ஆரம்பம் முதலே கொடுத்து தினமும் காய்­கறி சாப்­பிடும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்.

எண்­ணெயில் பொரித்த ஜங்க் ஃபுட்­களை தவிர்க்க வேண்டும். காலை வேளையில் டீ, காபிக்கு பதில் பால் மட்டும் குடிப்­பது நல்­லது.

தேநீர், கோப்பி பழக்­கத்தை ஆரம்­பத்­தி­லேயே களை­வது நல்­லது.எனர்ஜி ட்ரிங்­குகள் அனைத்­திலும் நிரம்பி இருப்­பது. “சர்க்­கரை” மட்­டுமே.சர்க்­கரை கலந்த நீரை உண்­பதும் எனர்ஜி ட்ரிங்­கு­களை குடிப்­பதும் ஒன்று தான்.ஆகவே, இவற்றை குழந்­தை­க­ளுக்கு கொடுக்­காமல் பார்த்­துக்­கொள்ள வேண்டும்.

பாலில் தேவைப்­பட்டால் பனங்­கற்­கண்டு/ நாட்டு சர்க்­கரை போன்ற­வற்றை சிறிது சுவைக்­காக சேர்த்து குடிக்கக் கொடுக்­கலாம்.காலை உண­வாக நாம் உண்ணும் இட்லி, தோசை போன்­ற­வற்றை கொடுக்­கலாம்
மதியம் அரிசிச் சாதத்தை கஞ்சி வடி­கட்­டி­ய­தாக இருக்­கு­மாறு கொடுக்­கலாம்.

கூட காய்­க­றிகள் அதிகம் இருக்­கு­மாறும் , அனு­தினம் வேறு வேறு காய்­க­றிகள் உண்­ணு­மாறும் கொடுக்க வேண்டும். ஒரே காய்­க­றியை கொடுத்தால் குழந்­தைகள் அலுப்­புத்­தட்டி அவற்றை உண்­ணாது. ஆகவே வெரைட்டி முக்­கியம்.

இரவு ஒரு முட்டை சேர்த்து கலவை சாதம், பருப்பு சாதம் அல்­லது இட்லி போன்­ற­வற்றை ஊட்­டலாம்.
இனிப்­பு­களை வீட்­டி­லேயே செய்து சாப்­பி­டு­வது சிறந்­தது.
முடிந்­த­வரை உண­வ­கங்­களை தவிர்ப்­பது நல்­லது.

கட்­டாயம் தவிர்க்க வேண்­டிய உண­வுகள்
1. சோயா
2. கோதுமை
3. மைதா
4. சொக்லேற்
5. பாண்
6. கேக் வகைகள்
7. குளிர்­பா­னங்கள்
8. எனர்ஜி ட்ரிங்க்ஸ்
9. பொரித்த உண­வுகள்

குழந்­தை­க­ளுக்கு ஸ்ட்ரிக்ட் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை தேவை­யில்லை.அவர்­க­ளுக்கு மித­மான அளவில் ஆரோக்­கி­ய­மான மாவுச்­சத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். தினமும் அவர்­களை ஓடி­யாடி விளை­யாட ஊக்­கப்­ப­டுத்த வேண்டும். அவர்­க­ளுக்­கான “screen time”ஐ வரை­மு­றை­ப­டுத்­திட வேண்டும்.

குழந்தைப் பரு­வத்தை பொறுத்­த­வரை சோம்­பே­றித்­தனம் இல்­லாத சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பழக்கப்படுத்த வேண்டும்.சிறு வயதில் இருந்தே இப்படி நாம் குழந்தைகளை வளர்ப்பது எதிர்காலத்தில் அவர்கள் உணவு பழக்கத்தை நல்ல முறையில் அமைத்துக் கொண்டு நோய்கள் இன்றி வாழ வழிசெய்யும்.

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!