உணவுப் பரம்பல் மூலமாக ஆரோக்கியத்தை மேம்படுத்தல்

0 463

இலங்கை மக்கள் மத்­தியில் 22 சத­வீத­மானோர் ஊட்­டச்­சத்து பற்­றாக்­குறை கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­வ­துடன், சிறு­வர்கள் மத்­தியில் 15 சத­வீ­த­மா­னோர் வளர்ச்சி குன்­றி­ய­வர்­க­ளா­கவும் காணப்ப­டு­கின்றனர்.ஊட்­டச்­சத்து குறை­பாடு என்­பது எவ­ருமே கவ­னிக்­காத பாரிய பிரச்­சினை­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது.

ஐரோப்­பிய ஒன்­றியம், Solidaridad Network Asia மற்றும் அதன் பங்­கா­ளர்­களின் நிதி­யு­த­வி­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற “Reaching the Unreached Estates and Surrounding Communities on Equitable Water, Sanitation, Hygiene (WASH) for Improved Health and Nutrition Project” மேம்­பட்ட ஆரோக்­கியம் மற்றும் ஊட்­டச்­சத்­திற்­காக வச­திகள் கிடைக்­கப்­பெ­றாத தோட்­டப்­பு­றங்கள் மற்றும் சூழ­வுள்ள சமூ­கங்­க­ளுக்கு பயன்­பெறும் வகையில் குடிநீர், சுகா­தார வச­திகள் மற்றும் துப்­பு­ரவு வச­தி­களை வழங்­குதல் என்ற செயற்­திட்­டத்தின் கீழ் Sri Lanka Medical Nutrition Association (SLMNA) இன் ஆத­ர­வுடன் Nucleus Foundation (NF) மற்றும் Institute of Social Development (ISD) ஆகி­யன ஒன்­றி­ணைந்து வச­தி­களைப் பெற்­றுக்­கொள்ள வாய்ப்­பின்றித் தவிக்கும் கிரா­மப்­புற சமூ­கங்­க­ளுடன் நேர­டி­யாக பணி­யாற்றி வரு­கின்­றன.

இப்­பி­ரச்­சினை தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, சிறு­வர்கள் மற்றும் வளர்ந்­த­வர்கள் என இரு தரப்­பி­ன­ரதும் ஆரோக்­கி­யத்­திற்கு மிகவும் அவ­சி­ய­மான ஊட்­டச்­சத்து வகை­களை வழங்கி, நாட்டில் உணவுப் பரம்­பலை மகத்­தான அளவில் ஏற்­ப­டுத்தி, குடும்­பங்கள் அதன் மூல­மாக பயன்­பெ­று­வதை உறுதி செய்யும் வகையில் குடும்­பத்தை மைய­மாகக் கொண்ட நடை­முறை மற்றும் பொறி­மு­றை­களை வழங்­கு­வ­தற்­காக தொடர் பயிற்சி நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்ய அவை திட்­ட­மிட்­டுள்­ளன.

அந்த வகையில் முத­லா­வது நிகழ்­வுகள் மாத்­தளை, நுவ­ரெ­லியா மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன், இச்­செய்­தியை தமது சமூ­கங்கள் மத்­தியில் எடுத்துச் செல்ல இட­ம­ளிக்கும் வகையில் 525 இற்கும் மேற்­பட்ட சமூகப் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை உணவு ஊக்­கு­விப்புச் சபையின் முன்னாள் தலைமை அதி­கா­ரி­யான குமு­தினி குண­சே­க­ர­வினால் நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டுள்­ள­துடன், முறை­யான ஊட்­டச்­சத்தின் முக்­கி­யத்­துவம் தொடர்பில் SLMNAஇன் ஊட்­டச்­சத்து மருத்­துவ அதி­கா­ரி­களால் விளக்க அமர்­வு­களும் நடத்­தப்­பட்­டுள்­ளன.

ஊட்­டச்­சத்து வைத்­திய நிபு­ணரும், மருத்­துவ ஆராய்ச்சி நிறு­வ­கத்தின் ஊட்­டச்­சத்து துறை தலைமை அதி­கா­ரியும், SLMNA இன் முதல்­வ­ரு­மான வைத்­தியர் ரேணுகா ஜெய­திஸ்­ஸ­ இச்­செ­யற்­திட்­டத்தின் எண்­ணக்­க­ருவை வடி­வ­மைத்­துள்­ள­துடன், இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில், அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரு­கின்ற ஒரு நாடு என்ற வகையில், கடந்த காலங்­களில் மேம்­பட்ட சுகா­தார பெறு­பே­று­களை இலங்கை காண்­பித்­துள்­ளது.

எனினும், குறிப்­பாக எமது நாட்­டி­லுள்ள பெருந்­தோட்டத் துறை, சூழ­வுள்ள கிரா­மப்­பு­றங்கள் மற்றும் பாட­சா­லைகள் மத்­தியில் மோச­மான ஊட்­டச்­சத்து நிலைமை தொடர்ந்தும் சுகா­தாரம் சார்ந்த முக்­கி­ய­மான ஒரு பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­கின்­றது. ஆகவே, நாட்டின் ஒட்­டு­மொத்த ஊட்­டச்­சத்து நிலை­மையை திருப்­தி­ய­ளிக்கும் மட்­டத்­திற்கு மேம்­ப­டுத்­து­வ­தற்கு, இந்த வகை­யி­லான இலக்கு வைக்­கப்­பட்ட செயற்­திட்­டங்­க­ளி­னூ­டாக, அப்­பி­ர­தே­சங்­களில் காணப்­படும் ஊட்­டச்­சத்து தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது கட்­டா­ய­மான தேவை­யாக மாறி­யுள்­ளது.

பெருந்­தோட்­டங்கள் மற்றும் சூழ­வுள்ள சமூ­கங்கள் மத்­தியில் பொருத்­த­மான ஊட்­டச்­சத்தை வழங்க இட­ம­ளிக்கும் வகையில் முறையே அந்த சமூ­கங்­களைப் பயிற்­று­விக்க வல்ல சமூகத் தலை­வர்கள், பாட­சாலை ஆசி­ரி­யர்கள் மற்றும் ஏனைய அடி­மட்ட அதி­கா­ரிகள் ஆகி­யோரின் ஆற்­றலைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே இச்­செ­யற்­திட்­டத்தின் நோக்­க­மாகும்.

இதனை முழுமை பெறச் செய்யும் வகையில், வீட்டுத் தோட்டம் அல்­லது சமை­ய­லறைத் தோட்டம் என வெறு­மனே அமைத்து­வி­டாமல், ஊட்­டச்­சத்து மிக்க காய்­கறி வகை­களைக் கொண்ட தோட்­ட­மாக, மிகவும் ஆரோக்­கி­ய­மான பயிர்­களை தமது காணி­களில் வளர்ப்­ப­தற்­கான வழி­காட்­டல்­களும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஆசி­ரி­யை­யான என். வசந்தி குமாரி கூறு­கையில், இந்­நி­கழ்வு மிகவும் சிறப்­பாக இடம்­பெற்றது. இங்கு பகி­ரப்­பட்ட தகவல் விவரங்கள் எமது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. எமது குடும்பத்திற்காக எவ்வாறு பயிர்களை வளர்ப்பது மற்றும் சிறந்த உணவைத் தயாரிப்பது ஆகியவை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாம் சிறந்த உணவை உட்கொள்ளத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளோம் என்ற உணர்வு எமக்குள் ஏற்பட்டுள்ளதுடன், அதனை எமது சமூகத்திலுள்ள ஏனையோரும் பின்பற்றும் வகையில் அவர்களுக்கும் அறிவூட்ட முடியும் என்பதையும் நாம் அறிவோம், என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!