லசந்த கொலை: கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

0 128

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவில் இரு சிவில் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில் படு­கொலை செய்­யப்­பட்ட சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் அமெ­ரிக்­காவில் வசிக்கும் மகள் அஹிம்சா விக்­ர­ம­துங்க மற்றும் சித்­தி­ர­வ­தை­களால் பாதிக்­கப்­பட்ட கன­டாவில் வசிக்கும் இலங்­கை­ய­ரான ரோய் சமா­தானம் ஆகியோர் சார்­பி­லேயே இந்த இரு வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லைக்கு அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ள­ராக இலங்­கையில் செயற்­பட்ட கோட்­டா­பய ராஜ­பக் ஷ பொறுப்புக் கூற வேண்டும் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள அஹிம்சா விக்­ர­ம­துங்க, அது தொடர்பில் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தரு­மாறு கலி­போர்­னியா மாவட்ட நீதி­மன்­றிடம் மனுத் தாக்கல் செய்­துள்ளார்.

இந்­நி­லையில் ரோய் சமா­தானம்’எனும் தமிழர் சார்­பாக சிவில் வழக்கை, சர்­வ­தேச உண்மை மற்றும் நீதிக்­கான திட்டம், அமெ­ரிக்­காவின் ஹவுஸ்பெல்ட் ( housfeld ) எனும் சட்ட நிறு­வ­னத்­துடன் இணைந்து கலி­போர்­னியா மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்­ளது.

சர்­வ­தேச உண்­மைக்கும் நீதிக்கும் உண்­மைக்­கு­மான திட்டம் (itjp), ஹவுஸ்பெல்ட் ( housfeld )சட்ட நிறு­வனம் என்­பது கலி­போர்­னி­யாவின் தனியார் புல­னாய்வு நிறு­வனம் ஒன்­றினை வாட­கைக்கு அமர்த்தி, கோட்­டா­பய ராஜ­பக் ஷ தொடர்பில் தகவல் திரட்­டி­யுள்­ளனர்.

இந்­நி­லையில், கோட்­டா­பய ராஜ­பக் ஷ, அவ­ரது நெருங்­கிய நண்­ப­ராக கரு­தப்­படும் வர்த்­தகர் சஞ்­ஜீவ குண­சே­க­ரவின் மகளின் திரு­ம­ணத்­துக்­காக அமெ­ரிக்கா வந்­துள்­ள­மையை அந்தப் புலா­னய்­வா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ள­துடன் அவர் கலி­போர்­னி­யாவில் தங்­கி­யுள்­ள­தையும் உறுதி செய்­துள்­ளனர்.

அதன்­ப­டியே நீதி­மன்­றுக்கு விரி­வாக மனு­தா­ரர்கள் அறிக்கை சமர்ப்­பித்­துள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு, இவ்­விரு சிவில் வழக்­குகள் தொடர்பில் கோட்­டா­பய ராஜ­பக்­க்ஷவை கலி­போர்­னியா மாவட்ட நீதி­மன்றில் ஆஜ­ராக வேண்­டு­மென்­ப­தற்­கான அறி­வித்­தல்கள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று இரவு கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ கலி­போர்­னி­யாவில் உள்ள ட்ரேடர்ஸ் ஜோஸ் அமெ­ரிக்கன் குரொ­சரி ஸ்டோர்ஸ் எனும் பல்­பொருள் அங்­கா­டிக்கு சென்­று­விட்டு திரும்ப முற்­பட்ட வேளையில் அங்­கி­ருந்த வாகன தரிப்­பி­டத்தில் வைத்து இவ்­விரு அறி­வித்­தல்­களும் கைய­ளிக்­கப்­பட்­ட­தாக சர்­வ­தேச உண்­மைக்கும் நீதிக்­கு­மான திட்டம் உறுதி செய்­தது.

2007 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத புல­னாய்­வா­ளர்­களால் கைது செய்­யப்­பட்ட தான், கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவின் நேரடி உத்­த­ரவால் தடுத்து வைத்து உடல் உள ரீதி­யாக சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தா­கவும் பின்னர் 2010 ஆண்டு தான் விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ள கன­டாவில் வசிக்கும் தமி­ழ­ரான ரோய் சமா­தானம், கோட்­டா­பய இலங்கை, அமெ­ரிக்க இரட்டை பிரஜா உரிமை பெற்­றவர் என்­பதால் கலி­போர்­னியா நீதி­மன்றை நாடி­ய­தாகவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் 2020 இலங்கை ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்கும் திட்­டத்­துடன் அமெ­ரிக்க பிரஜா உரி­மையை நீக்கிக் கொள்ள கோட்­டா­பய ராஜ­­பக்ஷ முயற்சி எடுத்­துள்ள நிலையில் இந்த இரு வழக்­குகள் அதில் தாக்கம் செலுத்­தலாம் என அர­சியல் அவ­தா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

‘கோட்­டா­ப­ய­வுக்கு எதி­ரான இரு வழக்­கு­களில் ஒன்றை முன்­னின்று நடாத்தும் சர்­வ­தேச உண்மை மற்றும் நீதிக்­கான திட்­டத்தின் தலைவர் யஸ்மின் சூக்கா தெரி­விக்­கையில், மேலும் பல சித்­தி­ர­வ­தையால் பாதிக்­கப்­பட்டு உயிர் பிழைத்­த­வர்கள் இதில் இணைவர் என நம்­பு­வ­தாக கூறினார்.

அமெ­ரிக்­கா­வுக்கு தனிப்­பட்ட பயணம் மேற்­கொண்­டுள்ள கோட்­டா­பய ராஜ­ப­க் ஷ எதிர்­வரும் 12 ஆம் திகதி மீள நாட்­டுக்கு திரும்ப உத்­தே­சித்­தி­ருந்த நிலையில், இவ்விரு வழக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo