வரலாற்றில் இன்று ஏப்ரல் 09 : ஜப்பானிய விமானங்கள் திருமலை, மட்டக்களப்பு கடற்பகுதியில் தாக்குதல் நடத்தின

0 153

1241: மொங்­கோ­லியப் படைகள் போலந்து மற்றும் ஜேர்­ம­னியப் படை­களைத் தாக்கி தோற்­க­டித்­தன.

1413: ஐந்தாம் ஹென்றி இங்­கி­லாந்து மன்­ன­னாக முடி­சூ­டினார்.

1867: ரஷ்­யா­வி­ட­மி­ருந்து அலஸ்கா மாநி­லத்தை வாங்­கு­வ­தற்­கான உடன்­ப­டிக்­கைக்கு அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் மேல­திக ஒரு வாக்­கினால் அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டது.

1940: இரண்டாம் உலகப் போரில் நோர்வே மற்றும் டென்மார்க் மீது ஜேர்­மனி தாக்­கு­தலைத் தொடுத்­தது.

1942: ஜப்­பா­னிய விமா­னங்கள் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­திலும் கிழக்கு கடற்­ப­கு­தி­யிலும் தாக்­குதல் நடத்­தின. பிரித்­தா­னிய கடற் ­ப­டையின் எச்.எம்.எஸ். ஹேர்மஸ், அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டையின் எச்.எம்.ஏ.ஏஸ் வாம்­பயர் ஆகிய கப்­பல்கள் இத்­தாக்­கு­தலில் அழிந்­தன.

1948: ஜெரு­சலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிரா­மத்தில் 120 அரபு மக்கள், இஸ்­ரே­லி­யர்­களால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1953: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது விண்­வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்­களை நாசா அறி­வித்­தது.

1967: போயிங் 737 விமானம் முதல் தட­வை­யாக பறந்­தது.

1991: சோவியத் ஒன்­றி­யத்­தி­லி­ருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக ஜோர்­ஜியா அறி­வித்­தது.

1992: பனா­மாவின் முன்னாள் ஜனா­தி­பதி மனுவேல் நொரி­யே­கா­வுக்கு ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சமஷ்டி நீதி­மன்றம் 30 ஆண்டு­கால சிறைத்­தண்­டனை அளித்­தது.

1999: நைஜர் ஜனா­தி­பதி இப்­ராகிம் மைன­சாரா படு­கொலை செய்­யப்­பட்டார்.

2003: ஈராக்கை அமெ­ரிக்கக் கூட்டுப் படை­யினர் கைப்­பற்­றினர். சதாம் ஹுஸைனின் 24 ஆண்டு கால ஆட்சி முடி­வுக்கு வந்­தது. பாக்­தாத்­தி­லி­ருந்த சதாம் ஹுஸைனின் பிர­மாண்ட சிலை­யொன்று வீழ்த்தி நொறுக்­கப்­பட்­டது.

2005: பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் சார்ள்ஸ், கமீலா பார்க்கர் போல்ஸை திரு­மணம் செய்தார்.

2012: குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்குச் சென்ற பிரேம்­குமார் குணரட்ணம், தான் கடத்தப்பட்டிருந்ததாக முறைப்பாடு செய்தார்.

2013: ஈரானில் ஏற்பட்ட பூகம்ப த்தினால் 37 பேர் உயிரிழந்ததுடன் 815 பேர் காயமடைந்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo